உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விதியின் நாயகி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 பாலமுருகனின் அபயக்கரம் ஏந்திய காலண்டரின் தாள்கக் காலம் என்னும் செப்பிடு வித்தைக்காரன் மாய மாய்க் களவாடிக் கொண்டிருந்தான். சிறுவன் குணசீலன் ரொம்பவும் பொறுப்பாக இருந் தான். வானவியில் காய்ச்ச சர்க்கரை அளக்க வரும் சோமு. காலில் எற்றிக்கொண்டு வரும் மிட்டாய்களை என்னை முந்திக் கொண்டு பொறுக்கி எடுத்து டின்னில் போட்டுவிடுவான் அவன். மார்க்கெட், பஸ் ஸ்டாண்ட், இளங்கோ நகர் என்று நான் பிஸினஸ் விஷயமாக வெளியே போய்த் திரும்பும் போது, என்னைத் தேடி வந்த நபர்களின் பெயர்களைக் குறித்து வைத்திருந்து, அவர்கள் வந்த காரணத்தையும் விளக்கமாக எடுத்துரைப்பான். - எனக்கு எவ்வளவோ வேலை மிச்சம். இந்தச் சில தினங் களாகத்தான் வாஸ்தவமாகவே எனக்கு ஓரளவு ஒய்வு கிடைத்து வருகிறது என்பதையும் சொல்லாமல் இருக்கக் கூடாது. வேலே முடியும் நேரம். தொழிற்கூடத் தலைவர் வந்தார். பாய்லிங் கணக்கு விவரம் சொன்னர்.

  • நாளேக்கு எப்படியும் பதினெட்டு பாய்லிங் போட்டு விடவேணும். சர்க்கரை ஸ்டாக் இருக்கு, ஆரணிக்கு புது பார்ட்டிக்குச் சரக்கு அனுப்பவேணும். அட்வான்ஸ் வாங்கி யாச்சு,’ என்று குறிப்புக் கொடுத்துவிட்டு, குறிப்புக் கணக்கு நோட்டைப் பிரித்தேன். கூலி கொடுக்க வேண் டாமா? அங்கு தினக்கூலிதான். இடம் பாண்டிச்சேரி, பாருங் கள்!...அன்ருடக் கூலியைத்தான் தொழிலாளர்கள் எதிர் பார்த்தார்கள்: - -

வழக்கப்படி, கடைசியில் கலி பெறுபவன் குணசீலன் தாள். . . . . . . . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விதியின்_நாயகி.pdf/50&oldid=476460" இலிருந்து மீள்விக்கப்பட்டது