பக்கம்:விதியின் நாயகி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 நான் படுக்கும் ஹாலே துப்புரவாகப் பெருக்கிவிட்டு, ஜேக்’கில் நீர் நிரப்பி வைத்துவிட்டு, நின்ருன் சிறுவன். ஒரு ரூபாயும் பத்துக்காசும் கொடுத்தேன். அவன் ஐம்பது காசை என்னிடம் திருப்பிக் கொடுத்து, *அண்ணுச்சி, இருநூத்தி அம்பது கிராம் பாவிஷ்மிட்டாய் கொடுங்க, எங்கம்மா ஆசையாய்க் கேட்டதுங்க,’ என்ருன். அவன் தவறு செய்ய அங்கு எவ்வளவோ வழிகள் குதுக்கும் நெடுக்குமாகக் காத்திருக்கின்றன. அப்படியிருந்தும் அவன்-அந்தச் சிறுவன் நேர்மை தவருமலே இதுவரை தடந்து வந்திருக்கின்ருன். ஆகவே, அவனிடம் காசைத் திருப்பிக் கொடுத்துவிட்டு, இருநூற்றைம்பது கிராம் நிறுத்து எடுத்துக் கொள்ளுமாறு தெரிவித்தேன். அந்த மிட்டாய்க் கான கிரயத்தை விற்றுவரவு வைத்துக்கொண்டு, அத் தொகையை என் கணக்கில் பற்று எழுதிக்கொள்ள வேண்டும்! குணசீலன் காசை வாங்கிக்கொள்ள மறுத்தான். உங்க அன்புதானுங்க எனக்கு வேணும். அது போதுமுங்க, அண்ணுச்சி!’ என்ருன் மிட்டாயை அள்ளி எடை போட்டான். - ஆரஞ்ச் எஸ்ஸென்ஸ் எவ்வளவு சுகமாக இருக்கிறது! ஐம்பது காசு உபரி விற்று வரவு வைத்துக் கொண்டேன்! குணசீலன் இன்று வேலைக்கு வரக் காணுேம்: தித்தநித்தம் காலையில் ஏழரை மணிக்கே வந்து விடுவானே குணசீலன்?--ஏன் வரவில்லை? ஒருநாள், இப்படித்தான் அவன் அலுவல் பார்க்க வர வில்லை. ஆனல், அவனுக்குப் பதிலாக, அவனுடைய வீவ் லெட்டர் வந்துவிட்டது. வெகு வக்கணேயாகவும் கூடிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விதியின்_நாயகி.pdf/51&oldid=476461" இலிருந்து மீள்விக்கப்பட்டது