பக்கம்:விதியின் நாயகி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவள்தான் விதியோ? இடம் பிசகவில்லை... திறந்து விடப்பட்ட டாட்ஜ் வண்டியின் பின்புறத்துக் கதவு வழியே குனிந்த தலையோடும், குனியாத கவனத் தோடும் மெதுவாக இறங்கினர் சபேசன். மூச்சு இறைக்க, மெள்ள மெள்ள முதுகை நிமிர்த்தி விட்டார். ஆயாசமும் ஆற்ருமையும் மேலிட்டன. வில்க் ஜிப்பா போட்ட சோளக் கொல்லைப் பொம்மையாகவா காட்சி தருவார்? கூடுதல் ரத்த அழுத்த நோய், சர்க்கரை வியாதி முதலான பணக்கார நோய்கள் ஆட்டிப் படைத்திடும் பயங்கரச் சோதனைகளுக்கு ஆளாகி நின்றவர் பின் எப்படி நிற்பார், பாவம்?... - . . . . . . அந்தப் பங்களாவின் போர்டிகோ வந்தது. சபேசன் நின்ருர்; வெட்டிப் பிளந்துக் கொண்டிருந்த நெடுமூச்சு மட்டும் நிற்கவில்லை. நெஞ்சைப் பற்றிக் கொண் டார் அவர். இப்போது நான் செய்யப் போற அந்தக் காரி பம் நல்லபடியாக முடிஞ்சிடுமா? வினைதீர்க்கும் முருகா, இனியும் இந்தப் பாவியைச் சோதிப்பது தர்மமாகுமா? பட். டது போதும். இனி இந்தச் சாண் உடம்பில் வெறும் எலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விதியின்_நாயகி.pdf/58&oldid=476468" இலிருந்து மீள்விக்கப்பட்டது