பக்கம்:விதியின் நாயகி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 96 சபேசன் உயிர்க்கழுவில் ஊசலாடிக் கொண்டிருந்தார்; அவருடைய மனமும் மனச்சாட்சியும் விம்மிப் புடைத்து வேடித்தன. கமலா!-நெஞ்சிலும் நினைவிலும் பிரசன்ன மான கமலாவின் அந்த ஆசை முகம் அப்போதும் அவரை நெருஞ்சி முள்ளாகக் குத்திக் குதருமல் தப்பி விடவில்லை. நான் பாவி அந்தப் பாவம்தான் என்ன ஒட ஒடத் துரத் திக் கொண்டே வந்து இப்போது சாவின் திருச் சந்நிதானத் தில் உடும்புப் பிடியாகப் பிடித்து வைத்துக்கொண்டு வேடிக்கை பார்க்கிறதோ?-வேடிக்கை காட்டுகிறதோ? அந்தப் பாவம் சாமான்யப் பட்டதா? செல்வச் செருக்கும் அணுசரனைச் சூழலும் இணைந்தும் பிணைந்தும் சபேசனின் இளமைப்பிராயத்துப் பருவவெறியை தலைவிரித்தாடச் செய்துகொண்டிருந்தகலாம் அது. அப்பாவி அப்பாவின் மரணத்துக்குப் பின், சபேசனே அந்த மாளிகை யின் ஏகச்சக்கராபதியாகிவிட்ட அத்தருணத்தில்தான் அவனு டைய அச்சுக் கூடத்திலே அச்சுக் கோக்கும் பணிக்கெனச் சேர்ந்த கமலாவைக் கண்டதும், அவனுக்குச் சேறிற்றில் முளைத்த செந்தாமரை மட்டுமில்லாது, நத்தை வயிற்றில் பிறந்த முத்தும் அவன் நினைவை ஆட்கொண்டதோடு ஆட்டி யும் படைத்தன. r கமலாவின் இயற்கை எழில் மகத்தானது ஆயிற்றே! சபேசன் கிறுக்கு ஆளுன். பின், கண்ணி வைக்காமல் ஒய்வாளு? கண்ணியில் புள்ளிமான் சிக்கியது. 'அன்புக் கமலா! சீமான் வீட்டுச் செல்வமாகிய என் சொத்து சுகம் அத்தனையுமே இனிமேல் உன் காலடிக்கே அர்ப்பணமாக்கும்! மணந்தால் உன்னையே மணப்பேன்! ..நமக்குள்ேள இனி ஜாதியோ அந்தஸ்தோ, அல்லது விதியோ குறுக்கிடவே முடி யாது. இது சத்தியம் என்னை நம்பு, கமலா!’ என்று 'டய லாக் பேசினன். * , கமலா தம்பினுள். உள்ளத்தைக் கொள்ளை கொண்டவ னுக்கு உடலையும் கொள்ளை கொள்ளச் செய்து விட்டாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விதியின்_நாயகி.pdf/60&oldid=476470" இலிருந்து மீள்விக்கப்பட்டது