பக்கம்:விதியின் நாயகி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97 அப்பாவிக் கன்னி. மறுநாள் தாலியும் கழுத்துமாக சமுதா பத்தின் முன்னே விளங்கப் போவதாகக் கனவு கண்டு கொண்டு சபேசனச் சந்தித்தாள் அவள். அங்கே அவளுக் குக் கிடைத்த பரிசு வேசி என்னும் பட்டம்தான்! அடப் பாவி! உன் பணக்காரப் புத்தியைக் காட்டி விட்டாயே? அன்றைக்கு நீ செய்த சத்தியத்தை தெய்வ வாக்காக நம்பி மோசம் போனேனே? ஐயையோ!...நம் சினிமாக்களிலே இப் படிப்பட்ட பயங்கரங்களைக் கண்டிருந்தும் ஏமாந்து விட் டேனே?...என்னே வஞ்சித்த-எனக்குத் துரோகம் செய்த நீ எந்நாளுமே விளங்கவே மாட்டாய்!...உன் குடும்பமும் உருப் படாது! ஆமாம்! என்னுேட ஆவி உன்னை நீ சாகிறமட்டும் துரத்திக்கினே இருக்கும் என்கிற விதியை மட்டும் நீ மறந்து விடாதே!’ என்று சாபம் கொடுத்து விட்டு, அவன் கன்னங் களில் நாலு அறைகளையும் கொடுத்துவிட்டு மறைந்தாள் கமலம். - கமலம் இட்ட சாபம் தான் சபேசன ஒட ஒடத் துரத்தி வருகிறதா? இல்லையென்ருல், நாள் பார்த்து நட்சத்திரம் பார்த்துத் திருப்பூட்டிய பெரிய இடத்தைச் சேர்ந்த ஆருயிர் மனைவி கோமதி திடுதிப்பென்று மாரடைப்பால் மரணம் அடைந் திருப்பாளா? கருவேப்பிலேக்கொழுந்துபோன்று பிறந்த ஒரே செல்வன் சேல்வராஜ் திருமணத்துக்கு நின்ற நேரத்தில், தொழிற்சாலையிலிருந்து காரில் திரும்பிக் கொண்டிருக்கையில் விபத்துக்குப் பலியாகி இருப்பான? அன்றைக்கு ஏழைப் பெண் கமலாவுக்குச் செய்த நம்பிக்கைத் துரோகத்தை-நம் பிக்கை மோசத்தை எண்ணி எண்ணி உருகி உருக்குலைந்து கொண்டிருக்கும் போது, இத்தகைய குடும்ப இழப்புகளின் மகத்தான-ஈடுகட்ட முடியாத சோகம் கூட்டுச் சேர்ந்து கொண்டு அவரது உள்ளத்தையும் உடலையும் அரித்தெடுத்து எலும்பும் தோலுமாக்கி மரணத்தின் நிலைப்படியில் கொணர்ந்து நிறுத்தியிருக்கும்ா?-செய்த பாவத்துக்கு மின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விதியின்_நாயகி.pdf/61&oldid=476471" இலிருந்து மீள்விக்கப்பட்டது