பக்கம்:விதியின் நாயகி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 னிப்புக் கோரிக் கழுவாய் தேடிக்கொள்ளாவிட்டால், நல்ல மூச்சு எப்படிக் கிட்டமுடியும்? நல்ல சாவு எங்கனம் கிடைக்க வாய்க்கும்? ஐயோ, க ம ல ச!...ஐயையோ, தெய்வமே!... -

  • கமலா;..,கமலா!...??

சபேசன் சுயப்பிரக்ஞையுடன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டார்; கமலம் படுரோசக்காரி:-தன் பெண்மையின் கற்பு பலியாகிவிட்ட அநியாயத் துயரத்தைத் தாங்காமல் அவள் கடலில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டிருக் கவே வேண்டுமென்றுதான் அவர் முடிவு கட்டியிருந்தார். ஆளுல், அதுவரை அந்த கமலத்தைப் பற்றின தகவல் எது வும்.கிட்டாதிருந்த நேரத்திலே சமீபத்தில் ஒருநாள் ஆபட்ஸ் பரிசியில் நிகழ்ந்த மணவினை விழாவொன்றில் ஏழைமகள் கம லாவை பணக்காரியாக அவள் கணவன் அருகில் தோளோடு தோள் பின்னி நின்றுக்கொண்டிருக்க கண்டதும், சபேசன் அடைந்த வியப்பைக் காட்டிலும், அடைந்த சஞ்சலமும் உறுத்தலுமே அதிகமாயின. கமலாவை அடிநாளிலேயே சந்திக்கும் ஒருவாய்ப்பைத் தெய்வம் அருளியிருந்தால் அவள் காலடியில் விழுந்து கதறி மன்னிப்பு வேண்டியிருந்தால் ஒரு வேளை, இப்படிப்பட்ட அவலங்களுக்கெல்லாம் தான் பலியா காமல் தப்பி விட்டிருக்கக் கூடுமோ?... அரவம் கேட்கவே, அரவம் கண்ட பாங்கில், சபேசன் தலையை நிமிர்த்த முயன்ருர். வெட்கமும் வேதனையும் உறுத்தலும் விழிகளில் நீர் தெளித்திருக்க வேண்டும். வாங்க ஐயா!’ ‘டிக்காக உடுத்திக் கொண்டிருந்த ஒரு மனிதர்' புன்னகை துவங்கிடவந்தமர்ந்தார். . . . . ; வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருந்த சபேச னுக்கு வேர்வை ஆருகப் பெருக்கிற்று. ੇ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விதியின்_நாயகி.pdf/62&oldid=476472" இலிருந்து மீள்விக்கப்பட்டது