பக்கம்:விதியின் நாயகி.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரசல் ஜட்கா சத்தம் கேட்டது. பட்டறையிலிருந்தபடியே ஆவலோடு தலையை நீட்டிப் பார்த்தார் பொன் வேலை செய்யும் காசி. நெக்லஸ் கொடுத் திட்டுப் போன அந்த மீன அம்மாளாக இருந்தால் தேவ. லாமே!’ அவர் முகம் மாறியது. ஜட்கா, ராணி ஆஸ்பத்திரியைத் தாண்டி மேற்கே ஒடியது. மீளு அம்மாள் ஏன் இன்னமும் வரவில்லை? 'என்னுங்க! ராத்திரிப் பாட்டுக்காச்சும் ஏதானும் வழி பிறந்திச்ச்ா? இல்லே, இன்னிக்கும் ஏகாதசி விரதம்தாசூ??? காசி கைகளைப் பிசைந்தார். - •.. . . கையிலே மடியிலே காசு புழங்குகிறபோது, கால் அரை சேர்த்து வைக்கச் சொல்லிக் கெஞ்சிக் கூத்தாடினேன். நான் சிறுவாடு சேர்த்து வெச்சிருந்த ஒண்னு ரெண்டையும் தங்க விடலே!’ என்று செருமினுள் காமாட்சி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விதியின்_நாயகி.pdf/80&oldid=476490" இலிருந்து மீள்விக்கப்பட்டது