பக்கம்:விதியின் நாயகி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 குமாருக்கு ஏக மகிழ்வு. கழுத்துச்சங்கிலியை சட்டைக்கு வெளியே அழகாகப் போட்டான். அப்பாவின் படுக்கைக்குச் சென்ருன். கன்னத்தைத் தடவினன். அப்பா!' என்ருன். ராமலிங்கம் பைய பைய விழிகளைத் திறக்க எத்தனம் செய் தார். தவமிருந்து பெற்ற குலக் கொழுந்தின் நெற்றியைத் தடவ கையை உயர்த்தினர். அது நழுவி விழுந்தது. அவர் கண்கள் கலங்கின. குமார் தந்தையின் கண்ணிரைத் துடைத் தான். நீங்க எதுக்கும் கவலைப்படாதிங்க அப்பா அடுத்த மாசம் நீங்க சொன்ன மாதிரி உங்களுக்கு அறுபதுக்கு அறு பது விசேஷம் தடபுடலா நடக்கும், அப்பா!...டாக்டர் தைரியம் சொல்லியிருக்காரக்கும். ஆமா, அப்பா!... வேணும்ன, அம்மாவுக்கு உதவியா நம்ம அக்காவை வர வழைச்சிக்க லாமா??-கேள்வியை பவ்யமாகக் கேட்டான் குமார். ராமலிங்கம் தம் மனையாட்டியை நோக்கி விரலை அசைத் தார். பிறகு, விரலசைவில் எழுதுவது போன்ற ஒரு பாவனை யைக் காண்பித்தார். அவளுக்குப் புரிந்துவிட்டது. மகள் கமலாட்சி எல்லோரது நலம் கோரி எழுதியிருந்த தபாலுக் குப் பதில் அனுப்பிய விவரத்தை அவர் அறிய ஆவல் காட் டிஞர். அகிலாண்டம் நெருங்கி உட்கார்ந்தாள். 'உங்க ளுக்கு உடம்புக்கு முடியாமல் இருக்கிறதைப்பத்தி கமலாட் சிக்கு எழுதலே. பாவம், அது பொறுக்காது. நாளைக்கு எழுது றேன். ஒருதரம் இங்கே வந்திட்டுப் போகச் சொல்லலாம்னு இருக்கேனுங்க!” என்று தெரிவித்தாள். • கைகளை உயர்த்தி சரி சொன்னர் ராமலிங்கம். உதயத் தின் மலர்ச்சியில் தெறித்த கதிர்கள் அவரது முகத்தில் அணைந்தன. * . ごぐ。リー。。。。 உள்ளே சென்று மீண்டாள் அகிலாண்டம். மஞ்சளும் திலகமும் பூத்துணுக்கும் பொலிவூட்டின. ー。ー。ミー全ー・三、ミーリー டாக்டர் வந்தார்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விதியின்_நாயகி.pdf/9&oldid=476419" இலிருந்து மீள்விக்கப்பட்டது