பக்கம்:விந்தன், மு. பரமசிவம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

SO விந்தன் முழுவதும் தன்னிடம் நாயாயுழைத்த ஒரு ஏழைத் தொழிலாளி வேலை செய்வதற்கு லாயக்கில்லாமற் போனால் அவனுக்காக ஒரே ஒரு ரூபாய் செலவழிக்கக்கூட மனம் வருவதில்லை மனிதன் என்ன யந்திரத்தைவிட அல்வளவு மட்டமானவனா இரும்பு யந்திரத்தை வேண்டுமானால் மனிதன் நினைத்தால் சிருஷ்டித்துவிடலாம், மனிதன் யந்திரத்தை மனிதன் நினைத்தால் சிருஷ்டித்துவிட முடியுமா?" (மனித யந்திரம்) இதுதான் ஆயிரம் ஆயிரம் ஏழைத் தொழிலாளிகளின் இன்றைய நிலை "ஒரு வர்க்க சமூகத்தில் இடம் பெற்றுள்ள இரு வேறு பகைமை வர்க்கங்களை விந்தன் பல சிறுகதைகளில் எடுத்துக் காட்டுகிறார் 'எத்தனை பேர்? என்ற சிறுகதை இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு சின்னசாமி, பெரியசாமி என்ற இருவர் வைரவன் செட்டியாரின் வீட்டுக் காவற்காரர்கள், இவர்களை வைரவன் செட்டியார் நாயை விடக் கேவலமாக நடத்துகிறார் வைரவன் செட்டியார் பெரியசாமியின் பிணம் இருக்கும் பொழுதே வேறு ஒரு வேலைக்காரனுக்கு ஏற்பாடு செய்கிறார் கஸ்தூரி பவனத்தின் உரிமையாளரான வைரவன் செட்டியாரைக் கிண்டல் கலந்த யதார்த்தமான முறையில் அறிமுகப்படுத்துகிறார் (எத்தனை பேர்?) 'கஸ்தூரி பவனம் அவருடைய சொந்தப் பங்களாதான் இகவாழ்க்கையில் உள்ள சுகங்களை அனுபவித்து அனுபவித்து அவர் அலுத்து போனவர். ஆனால் அதற்காகப் பரலோகம் சென்று விடவும் அவர் விரும்பவில்லை இத்தனைக்கும் இந்த லோகத்தை விட பரலோகம் எத்தனையோ விதத்தில் சிறந்தது என்று அவர் அறிந்திருந்தார். தான் அறிந்த உண்மையை பிறருக்கு எடுத்துச் சொல்லிக்கொண்டு வந்தார் ஆனால் அவர் மட்டும் அந்த வழியை பின்பற்றவில்லை " வைரவன் செட்டியாரை உணர்வுபூர்வமாக இந்த முறையில் அறிமுகப்படுத்தும் ஆசிரியர் உழைப்பின் வர்க்கத்தின் அவலநிலையை உருக்கமாக அதே கிண்டல் கலந்த யதார்த்த முறையில் சித்திரிக்கிறார். அவர் கூறுகிறார் 'நாய்க்கு என்ன தெரியும்? எசமானைக் கண்டால் வாலைக் குழைக்கவும், அன்னியரைக் கண்டால் குரைக்கவும்தான் தெரியும் எசமானர் காரில் ஏறும்போதும் இறங்கும் போதும் கதவைத் திறந்துவிட முடியுமா? ஹாரன் சத்தம் கேட்டதும் அலறியடித்துக் கொண்டு வந்து ஒடி பங்களாவின் கேட்டைத் திறந்து விட தெரியுமா? இரவில் உறங்குகிறாயே உன்னை வேலையிலிருந்து தூக்கிவிடுவேன் என்றும், நின்ற இடத்திலேயே நிற்காமல் போறாயோ விரட்டி விடுவேன் என்றும் நாயைப் பய முறுத்த முடியுமா? இப்படி பல செளகரியங்களை முன்னிட்டு தான் பெரியசாமியையும் சின்னசாமியையும் தமது