பக்கம்:விந்தன், மு. பரமசிவம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 பத்திரிகை உலகில் புரட்சி இளம் வயதில் நண்பர் ராஜாபாதர் அச்சுக்கோர்க்கவும் தாம் ஆசிரியராகவும் இருந்து வீரசக்தி' என்ற வார இதழை வெளியிட்டார் விந்தன் அந்த முயற்சி 1954 ஆகஸ்டில் மனிதன் என்னும் மாத இதழை வெளியிட முன்னுதாரணமாகும். (கல்கி இதழும் ஆகஸ்ட் மாதம்தான் வெளியிடப்பட்டது) விந்தனின் மனிதன் பத்திரிகை உலகில் ஒரு புரட்சிகரமான ஏடாக இருந்தது. அதில் வெளியான செய்திகளிலும் சித்திரங்களிலும் புதுமையும் புரட்சியும் இணைந்து வெளிப்பட்டன. டாக்டர் மு.வரதராசனார், பன்மொழிப்புலவர் கா. அப்பா துரையார், கவிஞர் தமிழ்ஒளி, எம்.எல். சபரிராஜன், ஜெயகாந்தன், விந்தன் போன்றவர்களின் எழுத்துக்கள் பத்திரிகையை சிறப்பாக்கின. இதோ ஒரு சுயமரியாதைக்காரர், கடவுளைப் படைத்த மனிதன், தெரு விளக்கு, போன்ற பகுதிகள் பத்திரிகையின் தரத்தை நோக்கத்தை வெளிப்படுத்தின மனிதன் பத்திரிகையைப் பற்றி கல்கி எழுதுகிறார். 'மனிதன்' வாழ்க! தமிழர் பண்பாட்டில் உயர்நிலை எந்த பாடல் வரியிலாவது இருக்கிறது என்றால் அது "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்னும் கவிதை வரிதான் இந்த அமுத வாக்கியத்தை இலட்சியமாக அமைத்துக் கொண்டு தோன்றியிருக்கும் மனிதன் மாதப்பத்திரிகைக்கு வரவேற்பு அளித்து வாழ்த்து கூறுகிறோம். 'மனிதன் எதனால் உயர்கிறான்? என்ற கேள்வியைத் தலைப்பாகக் கொண்டு இப்பத்திரிகையில் வெளியான கட்டுரை ஒன்று நேயர்களின் கவனத்தில் இருக்கலாம். மனிதன் உழைப்பினால் உயர்கிறான் ஊக்கத்தினால் உயர்கிறான்; ஒழுக்கத்தினால் உயர்கிறான்; அன்பினால் உயர்கிறான்; அறிவினால் உயர்கிறான் என்றெல்லாம் பதிலும் தரப்பட்டிருக்கிறது. மனிதன் உயர்வதற்கு உரிய இந்த நற்பண்புகளையெல்லாம் மனிதன் பத்திரிகை பெற்று வெளி வந்திருக்கிறது என்பதைப் பார்க்க மிக்க மகிழ்ச்சி உண்டாகிறது.