பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 செந்தமிழ்நாட்டிலே விந்தன் - சிறுகதை - ஆய்வு - திருமதி டாக்டர் கஸ்தரரிராசா தமிழறிஞர் மு. பரமசிவம் அவர்கள், மக்கள் மறந்துவிட்ட கோவிந்தன் என்ற படைப்பாளியைப் பாட்டாளிகளின் தோழன். நினைவுக்குக் கொண்டு வருகின்ற இந்த நல்ல பணியை மேற்கொண்டுள்ளார். அவருக்கு முதலில் நன்றியினைக் கூறிக் கொள்கிறேன். முல்லைக்கொடியாள் என்ற சிறுகதைத் தொகுப்பிலுள்ள அனைத்துச் சிறுகதைகளையும் ஆராயின், காலம், இடந்தராததால் ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல ‘செந்தமிழ் நாட்டிலே’ என்ற சிறுகதையை ஆராய முனைகிறேன். சிறுகதை இலக்கணம் தொல்காப்பியம் சிறுகதையைப், பொருளொடு புணராப் பொய்மொழி என்று குறிப்பிடுவதை அனைவரும் அறிவர். 'சுவையான ஒரு நிகழ்ச்சி அல்லது சூழ்நிலை அமைப்பு, கவர்ச்சியான ஒரு காட்சி, நெருங்கிப் பின்னப்பட்ட சிறு நிகழ்ச்சிகள், ஒருவரின் தனிப்பண்பு, ஒருசிறு அனுபவம் அறவுணர்வால் விளைந்த ஒரு சிக்கல் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்று நல்ல சிறுகதையின் அடிப்படையாக அமையலாம் என்கிறார் டாக்டர் மு.வ. அவர்கள். ‘செந்தமிழ் நாட்டிலே’ என்ற சிறுகதை, நம் நாட்டின் சூழ்நிலையையும், அறம் அழிவதையும், நடப்பியல் உண்மையையும் மிகத் தெள்ளிதின் விளக்குகிறது.