பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. பரமசிவம் 46; ‘தெய்வந்தான்! இல்லேன்னா என்னை உன் வாயிலே இருந்து காப்பாத்தியிருக்க முடியுமா? என்றான் பொன்னையா சிரித்துக்கொண்டே. அந்தப் பணம் மனமுவந்து கொடுத்த பணமல்ல; மனைவி சொன்ன யோசனையின் பேரில் தம் மானத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காகக் கொடுத்த பணம்; தன்னை எப்பொழுதுமே தாழ்த்தப்பட்டவனாக வாழச் செய்யும் பணம் அது என்பது ஏழை பொன்னையாவுக்கு எப்படித் தெரியும்? இதே மாதிரியான கதைதான் யாருக்குப் பிரதிநிதி? 'கருவேப்பிலைக்காரி ஒரே உரிமை', ஓர் அதிசயம்.' முல்லைக் கொடியாள், ஒரே உரிமை - சிறுகதைத் தொகுப்புகளிலிருந்து, பிற்காலக் கதைகள் மாறுதல் உற்று இருப்பது, இரண்டு ரூபாய் - விந்தன் கதைகள் - இவைகளைப் பார்க்கையில் பளிச்சென்று தெரிகிறது. வித்தன் ஆரம்ப காலத்தில், முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் மனிதர்களின் பாமர குண விஷேசத்தைக் கொஞ்சம் கைப்படுத்திக் காட்டினார். படிப்பு - விஞ்ஞானம் தொழில் உறவு - பனத்தின் மீது பொதுவாக எல்லோருக்கும் ஏற்பட்ட வேட்கை - சமூக உறவுகளைப் பாதித்து பாமரத்தன்மையை அழித்து விட்டபடியால் - விந்தன் கதைகளில் வரும் மனிதர்கள், 4 : 58 #? மனிதர்களாகிவிட்டார்கள். பாமரத்தன்மை கொண்ட மனிதர்களின் இன்றைய பிரச்சனை, என்ன நடந்து கொள்கிறான் என்பதைக் கவனிக்கையில், வித்தன் கதைகள் தொடர்பை இழந்து விடுகின்றன. இதனாலே, பாமரத் தன்மையை உதறித்தள்ள வேண்டி அவசியம் இவருக்கு ஏற்பட்டு விட்டது. இதனை விடிந்தன் கதைகள் - இரண்டு ரூபாயும் தெளிவாக்குகின்றன. ஆனால், இவைகளின் கலையழகு என்பது இன்னும் தேய்ந்துவிடுகிறது. ஐடியா - வெறும் கிண்டலாக மட்டுமே அமைந்து விடுகிறது. சிறுகதையை இலக்கிய உருவம் என்பதற்கு மேலே கருத்தைச் சொல்லும் ஒரு சாதனமாக ஏற்றுக் கொண்டபடியால் இது தவிர்க்க முடியாத அம்சமாகி விடுகிறது.