பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆபிசாப்பியாசம் - ஒர் ஆய்வு - டாக்டர் சாலை இளந்திரையன் "பண்பாடும் பழம்பாட்டும் இருக்கட்டுங்காண். பசிப்பாட்டுக்கு என்ன பதில் சொல்லுகின்றீர்? என்று பண்பாட்டுக் காவலர்களை நோக்கிக் கேட்டவர்கள் சிறுகதை உலகில் சிலர் மிகச்சிலர் (அதாவது அந்தரங்க சுத்தியோடு என்று சொல்லுவார்களே, அந்த உள்ளத்தூய்மையோடு கேட்டவர்கள்.) அந்த மிகச் சிலரில் குறிப்பிடத்தக்க ஒருவர் திரு. விந்தன். சமூகத்தையும் அதன் உள்ளோட்டத்தையும் உணராமலே, கதைகள் படித்துக் கதை எழுதுவோர் பலர்; சமூகத்தைக் கண்டும், கண்டதைக் கலையாக்காமல், பணத்தின் மேலும் பாராட்டின் மேலும் கடைக்கண்னை ஒட்டுபவர்களும் பலர்; பொருளாதாரப் பிரச்னையா? அதைப்பற்றி எழுதுவது பிரச்சாரமன்றோ? என்று தீண்டாமை பாராட்டும் பெருமக்களும் பலர் உண்டு. மனித வாழ்க்கையில் ஆட்டிப் படைக்கிறது பொருளாதார ஏற்றத் தாழ்வு. அதைக் கண்டிருந்தும், அதைப் பற்றி எழுதாமல் சாக்குப் போக்குச் சொல்வது போலித்தனம் என்பதை ஏனோ பலர் உணரவில்லை. இப்போலி பேனாக்களின் வரிசையில் தம் பேனாவையும் சாத்திவிட விரும்பாத விந்தன், நாகரிகம், பக்தி என்னும் போர்வைகளைக் கிழித் தெறிந்து, அவற்றுள் அழிந்து கரு கும்