பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. பரமசிவம் 89 காலத்தை, கெட்ட நயவஞ்சகக்காரருக்கு நாசம் வரும் காலத்தை விந்தன் எப்போதும் விரும்பினார்; அந்தக் காலத்தை உருவாக்கும் பணியில், தமது எழுத்துத் திறனை அர்ப்பணித்தார். இன்றைய முற்போக்குத் தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவராக விளங்கும் விந்தன், 1916 செப்டம்பர் 22இல் பிறந்தார். 1975 ஜூன் 30இல் சென்னையில் மறைந்தார். 59வயது நிரம்பு முன்பே மறைந்த விந்தன், 150க்கு மேற்பட்ட சிறுகதைகள், 5 நாவல்கள், எண்ணற்ற கடடுரைகள், குட்டிக்கதைகள், பசி கோவிந்தம் என்ற கவிதை நூல் முதலியவற்றை எழுதியுள்ளார் 1942இல் கல்கி பத்திரிகையில் அச்சுக் கோக்கும் தொழிலாளியாகச் சேர்ந்த விந்தன், தமது எழுத்துத் திறமையாலும், கல்கி ஆசிரியர் ரா. கிருஷ்ண மூர்த்தியின் ஆதரவாலும் கல்கியின் உதவி ஆசிரியரானார் அங்கே சுமார் பத்தாண்டுக் காலம் (19421952) பணியாற்றினார். இந்தக் கால கட்டத்தில் தமது சிறுகதைகள் வாயிலாகவும், கல்கியில் எழுதிய பாலும் பாவையும் என்ற நாவல் வாயிலாகவும், பல்லாயிரக கணக்கான வாசகர் உள்ளததில ஒரு தனியிடத்தைப் பிடித்துக் கொண்டார். 1952க்குப் பிறகு கல்கியிலிருந்து விலகி, சினிமாத்துறைக்குச் சென்றார்; ஆனால், விடுதலை வேட்கை நிரம்பிய அவருக்கு, அது ஒத்துக் கொள்ளவில்லை. 1953-1954 வாக கில் மனிதன்” என்ற சொந்தப் பத்திரிகையை (இலக்கிய இதழை) ஆரம்பித்தார்: கவிஞர் தமிழ ஒளி, ஜெயகாந்தன் முதலியோர் அவரது முயற்சிக்குத் துணை நின்றனர். விஜய பாஸ்கரனின் சரஸ்வதி, ரகுநாதனின் சாந்தி ஆகியவை வெளிவந்த ஒரு முக்கியமான காலகட்டம் இது 1952க்குப் பிறகு தமிழ்நாட்டில் முற்போக்கு இலக்கியம செழிக்கத் தொடங்கியது எனினும, முற்போக்கு இலககிய இதழ்களுக்குப் போதிய ஆதரவு கிடைக்கவில்லை, குமுதம் விகடன், கல்கி முதலிய பத்திரிகைகளின் கையே மேலோங்கி இருந்தது (இன்றும அதே நிலைதான) இந்தச் சூழ்நிலையில மனிதன்' நிறுத்தப்பட்டதில் வியப்பில்லை