பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நினைப்பதும், உள்ளே இருப்பவர்கள் வெளியே வர நினைப்பதும் வேடிக்கையான வேதனைமிகுந்த நிகழ்ச்சி என்று அனுபவப்பூர்வமாக அறிவிப்பது. இதற்கெல்லாம் வித்தியாசமாக அமைந்திருப்பவை இந் நாட்டு மன்னர்கள் 'இதோ சில சுயமரியாதைக்காரர்கள் போன்ற கட்டுரைகள். ஏழை எளியவர்களைப்பற்றி அடக்கி ஒடுக்கப் பட்டவர்களைப்பற்றி எழுதியவர்களில் முன்னோடியான விந்தன் ஆசிரியர், குமாஸ்தா போன்ற நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த இந்நாட்டு மன்னர்களைப் பற்றியும், உழைத்தால் முன்னேறலாம்', 'உழையுங்கள், ஓயாமல் உழையுங்கள்!' என்று ஊருக்கு உபதேசம் செய்யாமல், உடலில் ஊனம் இருந்தாலும் உள்ளத்தில் உற்சாகம் பொங்க உழைத்து பிழைப்பவர்களே இச்சமூகத்தில் உண்மையான சுய மரியாதைக்காரர்கள் என்று சிலரை அடையாளம் காட்டு கிறார். கட்டுரைத் துறையில் விந்தனின் பங்குப்பணி சிறிதே எனினும் அவையும் சிறப்பாக அமைந்திருப்பதற்கு இந்தக் கட்டுரைத் தொகுப்பு சிறந்த உதாரணம். விந்தன் கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கும் முயற்சியில் சில ஆண்டுகளாக ஈடுபட்டிருந்த நான், சில மாதங்களுக்கு முன் கிறிஸ்தவ இலக்கியச் சங்கத்தின் செயலாளரும், கவிஞரும், எழுத்தாளருமான டாக்டர் தி. தயானந்தன் பிரான்சிஸ் அவர்களிடம் என் முயற்சியை தெரிவித்தபோது, என் இலக்கியப் பணிக்குத் தொடர்ந்து வெளிச்சம் காட்டிவருவதற்கு அடையாளமாக என் முயற்சியை மகிழ்ச்சியுடன் வரவேற்று இக்கட்டுரைத் X盟盟