பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 விந்தன் கட்டுரைகள் உடனே அவன் ஜன்னலுக்கு வந்து, அதன் வழியாகக் கீழே கூடியிருக்கும் எங்களை எச்சரிப்பான். நாங்கள் அங்கிருந்து தப்பிவிடுவோம்.' 'ஆச்சரியமாயிருக்கிறதே செட்டியார் வணிகர் என்று கேள் விப்பட்டேன். பொதுவாக வணிகர்கள் பணம் பண்ணுவதைத் தவிர வேறு எந்தவிதமான லட்சியமும் இல்லாதவர்களாயிருப்பார் கள். அத்தகையவரை ஓர் அரும் பெரும் லட்சியவாதியாக மாற்றக் கூடிய சக்தி அந்த நாளிலேயே பாரதியின் பாடல்களுக்கு இருந்தி ருக்கிறது, இல்லையா?” 'அது மட்டுமா? பெண்கள் விடுதலை குறித்து அவர் பாடிய பாடல்களும் பெரும் புரட்சி செய்தன. எங்களுடைய போதாத காலம் பிரிட்டனும் பிரான்சும் செய்துகொண்ட ஒர் உடன்படிக்கை யின்புடி பிரெஞ்சுப் பகுதிகள் சில ஆங்கிலேயர் வசமாக இருந்தன. அதில் பாண்டிச்சேரியும் சேர்ந்துவிடும் போலிருந்தது. அப்படி ஆகியிருந்தால் எங்கள் கதி அதோகதியாகியிருக்கும். ஆகவே, அதை வேறு எதிர்த்துப் பாரதி கிளர்ச்சி செய்யவேண்டியதாயிற்று. அந்தக் கிளர்ச்சியை அப்போதிருந்த கவர்னரின் ஆலோசகர்கள் பொருட்படுத்தாமல் உடன்படிக்கையை அப்படியே நிறைவேற்ற இருந்தார்கள். அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்ததுஅதாவது, அந்த ஆலோசகர்களின் மனைவிமார்கள் பாரதிக்காகத் தங்களுடைய கணவன்மார்களையே எதிர்த்து நின்று உடன்படிக் கையைத் தூக்கியெறிந்துவிட்டார்கள்!' 'தேவலையே, இந்தப் புரட்சிகளையெல்லாம் அங்கே பகத் சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோர் செய்வதற்கு முன்னாலேயே நீங்கள் இங்கே செய்து விட்டீர்கள் போலிருக்கிறதே!' "ஆமாம், எதிலும் முதலாயிருக்கிற தமிழன் அதில் மட்டும் பின்வாங்கிவிடுவானா?' உணர்ச்சிவேகத்தில் பெரியவருக்கு உள்ளுக்கும் வெளிக்கு மாக மூச்சு வாங்குகிறது. முதிர்ந்த வயது காரணமாக ஞாபக