பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிமணியும் காலனும் கவிமணி அவர்கள் காலமானார்கள் எனும் செய்திகேட்டு நம் கண்கள் கலங்குகின்றன, இனிய கிதம் பொழிந்துகொண்டி ருந்த புல்லாங்குழலை யாரோ தட்டிப் பிடுங்கிக் கொண்டதுபோல நம் நெஞ்சம் துடிக்கிறது தமது எழுபத்தொன்பதாவது வயதில் தான் கவிமணி இறந்திருக்கிறார்கள் எனினும், கவிஞர்க்கு, இளமையும் மூப்பும் ஏது? படுத்த படுக்கையாய்க் கிடந்து மடிந்த படுகிழவராயினும், அவர்களுடைய மறைவு நம் இதயத்தைப் பற்றி உலுக்குவதற்குக் காரணம் வீட்டிற்குச் சுமையாய் நாட்டிற்குப் பாரமாய் வாழாமல் 'பாட்டிற்கு மணி'யாய் அவர்கள் வாழ்ந்ததுதான் 'தெளிந்த தமிழ், அழகிய சொல், மணங் கமழும் மரபு, உளங் கவரும் உருவ அமைதி' ஆகிய பண்புகளுடன், கல்லும் கனிந் துருகும் வண்ணம் கவி மீட்டும் கவிஞர் பெருமான் நூறாண் டென்ன, ஆயிரம் ஆண்டுகள் வாழினும், 'வாழ்க, வாழ்க!' என்று வாழ்த்திக்கொண்டே இருப்பர், மக்கள் ஆனால் 'காலன் எதற்காக வும் காத்திருப்பதில்லை' என்றும், 'காலத்தோடு வந்து கவர்ந்து செல்வது தான் அவன் கடமை' என்றும் சிலர் கூறுகிறார்கள்இருக்கலாம், காலன் கவிமணியைக் கவர்ந்து சென்றுவிடலாம்ஆனால் அவர்களுடைய குரலை மட்டும் அவனால் கவர்ந்து செல்ல முடியாது. அது, கோடி கோடித் , தமிழர்களின் இதயக் குரலாய்என்றென்றும் மறக்க முடியா இன்னிசையாய் மாறி விட்டது! இன்றும், நாளையும், இவற்றைத் தொடர்ந்துவரும் எண் ணற்ற நாட்களும், அந்தக் குரலிலே, அதன் நாத லயத்திலே மயங்கி நிற்கப் போவதைக் காலம் காணத்தான் போகிறது. கண்டு, காலனை நோக்கி நகைக்கத்தான் போகிறது. இதோ பார்-அந்தக் கவிஞர் இருக்கிறார், இருந்து கொண்டிருக்கிறார், இனியும் இருப் பார்' என்று கூறத்தான் போகிறது. ஏனெனில், கவிஞன் பிறக்கி றான்; இறப்பதில்லை! -மனிதன், 1954 ماهه سوم نیمه حومه سه