பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாவல் பிறக்கிறது 37 களம்: ஒரு வீட்டின் முற்றம்; காலம்: பிற்பகல் 'அடி, காமு கோடி வீட்டுக் கோமளத்தைப் பார்த்தாயோ? அவள் ஏதோ ஒரு பத்திரிகைக்கு நாவல் எழுதினாளாம்; முழுசா ஆயிரம் ரூபாய் கிடைத்ததாம்; பத்து பவுனிலே இரண்டு வடம் சங்கிலி வாங்கிக் கழுத்திலே போட்டிண்டிருக்கா! நீயும்தான் இரவல் வாங்கியாவது தினம் ஏழெட்டு நாவல்கள் படிக்கிறே, என்னடி பிரயோசனம்? நாலு நாவல் படித்தால் உனக்கும் ஒரு நாவல் எழுத வராதோ?' 'ஏன் வராது, நல்லா வரும் நானும் எழுதி அனுப்பிண்டுதான் இருக்கேன், அவா போட்டத்தானே?" 'நீயே அனுப்பினால் போடுவாளோ? பார்க்கிறவாளைப் பார்த் துக் கொடுக்கிறவாகிட்டே கொடுக்கனும்!" 'அப்போ மட்டும் என்ன வாழுதாம்? தபால்காரன் திருப்பிக் கொண்டுவந்து கொடுக்கிறதுக்குப் பதிலா, அவாளே திருப்பிக் கொண்டு வந்து கொடுத்துடறா !' 'அட பாவமே சமைக்கத் தெரியுமா, சாப்பிடத் தெரியுமா?" என்றாவது ஏதாவது எழுதேண்டி!' 'அதையும் தான் எழுதிப் பார்த்தேன் 'என்ன எழு தினே?" 'அப்பளாம் இடுவது எப்படி, வடாம் போடுவது எப்படி?' என்று இரண்டு புத்தகங்கள் எழுதி வான்மதி பதிப்பகத்துக்கு அனுப்பிப் பார்த்தேன். அந்தப் புண்ணியவான் என்னடான்னா, 'பொரித்து எடுப்பது எப்படி, எடுத்துப் பரிமாறுவது எப்படி?’’ என்று இன்னும் இரண்டு புத்தகங்கள் எழுதி அனுப்பினால், நாலையும் அவுட்ரைட்"டா எடுத்துண்டு, நாற்பது ரூபாய் தரேன்னு எழுதியிருக்கான். காகிதத்துக்கும் மசிக்கும்கூடக் காணாது போலிருக்கே?'