பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாவல் பிறக்கிறது 39 இவர்களுக்கு நான் ஒன்று சொல்லுவேன்-நீங்கள் ஏதாவது எழுத வேண்டும். பிழைப்புக்காக, அல்லது பெயர், புகழுக்காகஅவ்வளவுதானே? இருக்கவே இருக்கின்றன. நம் அரும்பெரும் தமிழ் நூல்களில் சில-யார் எப்படி வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டு மானாலும் வியாக்கியானம் செய்வதற்குரிய வசதியோடுஅரைத்த மாவையே அரைத்துக்கொண்டு, கரைத்த புளியையே கரைத்துக் கொண்டு, காலட்சேபம் செய்யுங்களேன்? தாராள நோக்குடைய தமிழ்ப் பெருமக்களின் தயவு உங்களுக்குக் கிடைக் காமலா போய்விடப் போகிறது?-அவர்கள்தான் தயாராயிருக்கி றார்களே, உங்கள் வியாக்கியானங்களை வாங்கிப் படிப்பதோடு, விழாவும் கொண்டாட! என்னைப் பொறுத்தவரை 'நாவல் பிறந்த கதை'யை நான் இங்கே சொல்லப் போவதில்லை, , பிறக்கும் கதையைத் தான் சொல்லப் போகிறேன்: அதோ, நாற்பது வருடகாலம் இரவும் பகலுமாக மாறி மாறி உழைத்த பிறகு, ஓய்வு பெற்று வருகிறான் ஒரு மில் தொழிலாளி: 'யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே' என்பது போல, அவனுக்கு முன்னால் 'லொக், லொக்' என்ற இருமல் ஓசை வருகிறது, அவனை எதிர்நோக்கிக் குடிசையின் வாசலிலே நிற்கிறாள் அவன் மனைவி-'வரும்போது சும்மா வரமாட்டார், ஆயிரமோ, இரண்டாயிரமோ கொண்டு வருவார், கல்யாணத்துக் குத் தயாராகிப் பத்து வருடங்களாகக் காத்துக் கொண்டிருக்கும் பெண்ணுக்குக் கல்யாணம் செய்துவைத்து விடலாம், பையன் களில் யாராவது ஒருவனைப் பத்தாம் வகுப்பு வரையிலாவது படிக்க வைக்கலாம். குடிசையைப் பிரித்துக் கட்டலாம், மாற்றிக் கட்டிக்கொள்ள மறுசேலை வாங்கலாம்; மாடும் இரண்டு பிடித்துக் கொள்ளலாம்' என்றெல்லாம் எண்ணமிட்டபடி: அவன் அவளை நெருங்குகிறான். 'லொக், லொக்'