பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 விந்தன் கட்டுரைகள் இப்படியெல்லாம் ஆசிரியர் 'கல்கி' அவர்களைப் பற்றிக் கேள்விப்படும்போது, அத்தகைய மேதையின் வழித்தோன்றலில் நாமும் ஒருவனாகும் பேறு பெறவேண்டுமென்று நான் கனவு காண்பேன். அந்தக் கனவு நெடுநாட்களுக்குப் பிறகு, எனது அருமை நண்பரும், அக்கம்பக்கம் தெரியாமல் தேசத் தொண்டு செய்வதில் ஆர்வம் உள்ளவரும், கள்ளச் சிந்தையில்லாத வெள்ளை உள்ளம் படைத்தவருமான பூரீ டி.எம். ராஜாபாதரின் மூலம் ஒருநாள் நனவாகவே ஆகிவிட்டது. அதைக்குறித்து அன்று நான் அடைந்த பெருமை, இந்த ஜென்மத்தில் இன்னொருமுறை அடைய முடியாததாகும் ஆனால், என்னையும் ஒரு பொருட்டாக மதித்துத் தமிழ் நாட்டுக்கு அறிமுகப்படுத்தி வைத்த ஆசிரியர் 'கல்கி' அவர் களுக்கோ என்னால் ஏதாவது பெருமையுண்டா? இந்த நிலையில், நான் வழிபடும் தெய்வமாகவே எனது இதயக் கோயிலில் குடிகொண்டி ருக்கும் அவருக்கு, என்னுடைய நன்றி எந்த விதத்திலும் அவசிய மில்லையல்லவா? நான் கொஞ்சமும் எதிர்பாராத முறையில் இந்தப் புத்தகத்தை இவ்வளவு அழகாக வெளியிட்டிருக்கும் அன்பர் ரீ வி. ஆர் எம். செட்டியார் பி.ஏ அவர்கள் தமிழ்நாட்டாருக்குப் புதியவர் அல்லர் ஸ்டார் பிரசுராலயத்தின்மூலம் அவர் தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் செய்துவரும் சேவை யாவரும் அறிந்ததாகும் அவருடைய சேவையை ஒரு சமயம் தமிழ்நாடு இழந்துவிடும் படியான சந்தர்ப்பம் ஒன்று நேர இருந்ததை நேயர்களில் பலர் அறிந்திருக்க மாட்டார்கள் 1929-ஆம் வருஷம் இந்தோ-சீனாவைச் சேர்ந்த சைகோனுக்கு விஜயம் செய்த கவி ரவீந்தரரை வரவேற்று, அங்குள்ள தமிழ் மக்களுக்கு அவரை அறிமுகப்படுத்தி, விஸ்வபா ரதி சர்வ கலாசாலை நிதிக்காக 2601 டாலர்களையும் வசூலித்து அவரிடம் கொடுத்தார் ரீ வி.ஆர் எம். அவர்கள் கவி டாகுர்