பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்த்து 57 அவசியமில்லை, புலன்கள் அனைத்தும்- ஏன், கடைசி மூச்சு உள்பட-தாமாகவே அடங்கிவிடும். 'தத்துவம்' இதுவே! 'உண்மை' என்னவென்றால் மண், விண், நீர், நெருப்பு, காற்று ஆகிய பஞ்ச பூதங்களின் சேர்க்கையே இவ்வுலகம். இதனுள் வாழும் உயிர்களும் அப்படியே. பிறப்பினால் பஞ்ச பூதங்கள் சேருகின்றன; இறப்பினால் பஞ்சபூதங்கள் பிரிகின்றன. அவ்வாறு பிரியும் மண் மண்னோடும், விண் விண்னோடும், நீர் நீரோடும், நெருப்பு நெருப்போடும், காற்று காற்றோடும் கலந்து எந்தச் சூன்யத்திலிருந்து மனிதன் வந்தானோ,, அதே சூன்யத்தில் அவனைக் கொண்டு போய்ச் சேர்த்துவிடுகின்றன. இதற்குப் பின் இல்லாத ஒன்றைத்தான் மையமாக வைத்துப் பாவமென்றும் புண்ணியமென்றும், நரகமென்றும் மோட்சமென்றும் சொல்லி ஆசான்களும் அடியான்களும் கதைத்து வருகிறார்கள். இந்தக் கதையை நீங்கள் நம்பவில்லை யென்றால், அவர்களு டைய கதி அதோகதிதான்!-அதற்குப் பின் இங்கே சனாதனமும் இருக்காது, சாஸ்திரங்களும் இருக்காது. பாவமும் இருக்காது; புண்ணியமும் இருக்காது. நரகமும் இருக்காது, மோட்சமும் இருக்காது - இத்தகைய நிலைமைக்கு நீங்கள் இடங்கொடுத்தால் என்ன ஆகும்? - உழைப்பவன் வாயில் சோறு, உழைக்காதவன் வாயில் மண்ணு' என்று மக்கள் அனைவரும் தங்களைத் தாங்களே நம்ப ஆரம்பித்துவிடுவார்கள். அப்படி நம்ப ஆரம்பித்துவிட்டால் இந்துமதமே ஆட்டங்கான ஆரம்பித்துவிடும். அதைக் காத்துத் தங்களையும் காத்துக்கொண்டு வரும் மடாதிபதிகளின் நெற்றியில் விபூதிக்குப் பதிலாக வியர்வையும், அவர்களுடைய கையில் ருத்திராகூடித்திற்குப் பதிலாக மண் வெட்டியும் இருக்க வேண்டிய அவசியம் நேர்ந்துவிடும்-இந்த அபாயத்தைத் தவிர்ப்பதற்கா கத்தான் அடியான்களும் ஆசான்களும் நாம் விழித்துக் கொள்ளும் போதெல்லாம் நமக்குத் தத்துவ போதை ஊட்டித்துங்க வைக்கப் பார்க்கிறார்கள்.