பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 விந்தன் கட்டுரைகள் 'இதெல்லாம் எதற்கு, சொந்தமாக ஒரு பத்திரிகையே நடத்திப் பார்த்துவிடுவோமே?' என்று 1954-ம் ஆண்டில் 'மனித'னை ஆரம்பித்தேன். மக்கள் ஆதரவு அதற்கு அமோகமாக இருந்தும், விற்பனையாளர்கள் செய்த 'சத்திய சோதனை'யாலும், அந்தச் சத்திய சோதனையிலிருந்து அவ்வப்போது மீள்வதற்கு வேண்டிய பொருளாதார வசதியோ மீட்பதற்கு வேண்டிய நண்பர்களோ இல்லாததாலும் அதுவும் பிறந்த ஓராண்டு காலத்துக்குள்ளேயே பிராணனை விட்டுவிட்டது இதனால் எனக்கு நேர்ந்த இழப்புகளிளெல்லாம் மிகப் பெரிய இழப்பு, என்னுடைய நீண்ட நாள் நண்பரும், ஸ்டார் பிரசுரத்தின் உரிம்ையாளருமான திரு. ராமநாதனின் நட்பை நான் இழந்ததாகும். அதற்குப் பின் எத்தனையோ பிரசுரகர்த்தாக்கள், எத்தனையோ பிரசுரங்கள்- ஒன்றும் உருப்படியாக வரவில்லை. வந்தாலும் அவை புத்தக உலகில் நீடித்து நிற்க அந்தப் புண்ணியவான்கள் விடவில்லை. இந்தக் கசப்பான அனுபவங்க'ளுக்குப் பிறகு, நான் இப் போது மீண்டும் நண்பர் ராமநாதன் அவர்களுடனும், ஸ்டார் பிரசுரத்துடனும் தொடர்பு கொண்டுள்ளேன். அந்தத் தொடர்பின் முதல் நூலாக இந்த 'சுயம்வரம்' என்ற நாவல் வெளியாகியிருக்கி றது. இது 'டின் ஏஜர்'ஸுக்காக எழுதப்பட்ட நாவல்தான் என்றா லும், இதில் வரும் 'ஆனந்த'னைப் போலவோ, அருணா'வைப் போலவோ வேறு யாரும் ஆகிவிடக் கூடாது என்பதே என் விருப்பம். உங்கள் விருப்பமும் அதுவாகத்தான் இப்போதும் இருக்கும் என்பது என் நம்பிக்கை, பெண்களைப் பல வகைகளிலும் 'தெய்வமாகப் போற்றி வித்தது இந்த நாடு மாதர் தம்மை இழிவு படுத்தும் மடமையைக் கொளுத்துவோம்' என்று பாரதியைப் பொங்கியெழுந்து பாடச்