பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை 69 மாம்பழமாக மாறியிருக்கும் விந்தையையோ, 'பாப்' வெட்டிக் கொண்டிருக்கும் இங்கிலீஷ்காரி, பின்னல் போட்ட தமிழச்சியாக மாறியிருக்கும் அற்புதத்தையோ அவருடைய கதைகளில் காணோம். ஆசிரியரின் வெற்றிக்கு இது ஒன்றே போதுமானது: வேறொன்றும் தேவையில்லை இந்தத் தொகுதியில் வெளியாகியிருக்கும் முதற் கதையான 'அவதாரம்' அறியாமையைப் போக்கி அறிவுக்கு வேலை தருவ தாயிருக்கிறது போக வாழ்வை வெறுத்துப் போதி மரத்தின் நிழலைத் தஞ்சமடைந்த புத்தரின் வாழ்க்கையை அது திறம்படச் சித்திரிக்கிறது கதை பழைய கதையேயாயினும் ஆசிரியர் கையாண்டிருக்கும் வழி புதிய வழி. இதற்கு முன்னால் புத்தரைப் பற்றி எழுதியவர்கள் அவருடைய மனிதத்தன்மையைக் களைந்து அவர்மீது தெய்வத்தன்மையை ஏற்றினார்கள். இவரோ அவருடைய தெய்வத் தன்மையைக் களைந்து மனிதத் தன்மையை ஏற்ற முயன்றிருக்கிறார், அம் முயற்சியில் ஓரளவு வெற்றியும் பெற்றி ருக்கிறார். இருந்தாலும், 'இந்தக் கதையில் கலையம்சம் இல்லை, வெறும் பிரச்சார நோக்கந்தான் இருக்கிறது!' என்று ஊர் பேர் தெரியாத சில பிரகஸ்பதிகள் சொல்லக்கூடும். அவர்களைப்பற்றி மக்கள் கவலைப்படாமல் இருக்கும்போது நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? 'அவள் குழந்தை' ஆசிரியரின் எழுத்து வன்மைக்கு ஒர் எடுத்துக்காட்டு, உயிர்ச் சித்திரமாகவும், உணர்ச்சிச் சித்திரமாக வும் விளங்கும் அந்தக் கதை மடமையைச் சுட்டெரிப்பதோடு, இதயத்தில் என்றும் நீங்காத இடத்தையும் பெறுகிறது. அதற்கு அடுத்தபடியாக விளங்கும் "வெய்யிலும் நிழலும்' ஓர் ஒப்பற்ற குணச்சித்திரம் கதையின் முடிவு சிறிது கசந்தாலும் அதிலுள்ள கருத்து இனிக்கத்தான் செய்கிறது. கடைசிக் கதையான 'நினைவுச் சின்னம்' காதலையும் கடமையையும் மறந்து கயவர்களாகத் திரியும் கலைஞர்களுக்கு ஒர் அவமானச் சின்னம். 'மலரை யொத்தவர் மாதர்' என்னும் கவிஞர் கூற்றுக்கு ஆசிரியர் மேற்படி கதையில் செய்திருக்கும் வியாக்கியானம் நம்மைத் திகைக்க வைக்கிறது!