பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 விந்தன் கட்டுரைகள் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நெய்யும் கலையில் நிகரற்ற வராக விளங்கி வந்த இவர், அந்நியருக்கு இந்தியா அடிமைப் பட்டபின், இயந்திர சகாப்தம் இந்த உலகிலே ஆரம்பமானபின், மாற்றாந்தாய்க் குழந்தையாக மாறிவிட்டார், மணி மகுடம் பறி கொடுத்த மன்னராக ஆகிவிட்டார். அவ்வளவுதான் இயந்திரங் களின் இரும்புக்கரங்கள் கைத்தறியாளரின் கைகளை அடித்து நொறுக்கித் தூள் தூளாக்கிவிட்டன. அந்தப் பூதத்துடன் போட்டி யிட முடியாத கைத்தறியும், அதை இயக்கிக்கொண்டு அதன் இன்னிசையுடன் தன்னை மறந்திருந்த இந்த மன்னரும் கதியற்று, விதியற்றுக் காலமெனும் ஆற்றங்கரையின் மரமாக, அடிசாய்ந்து முடிசாய்ந்து விழுந்தனர். அது மட்டுமா? - ஒரு காலத்தில் பால் போன்ற ஆடையால் பாரத நாட்டு ராணிகளின் உள்ளங்களை மட்டுமல்ல - பழம் பெரும் ரோமாபுரி ராணிகளின் உள்ளங்களைக் கூடக் கொள்ளை கொண்ட இந்த ராஜா இன்று நடைபாதைகளிலே தன் சரித்திரத்தைச் சுருக்கமாகச் சாக்கால் எழுதிவிட்டு, வாய் விட்டுப் பிச்சை கேட்க முடியாமல் வயிற்றுக்கு மெளன பாஷையில் சமாதானம் சொல்லிக் கொண்டிருக்கிறார் குடிசைத் தொழில் வளர்ப்பதற்காக அடிக்கடி ஆகாய விமானத்தில் பறக்கும் அரும்பெரும் தலைவர்களை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கிறார்: அவர்களோ, காந்திமகானை ஒருவழியாகத் தீர்த்துக் கட்டிய பிறகு, அவர் புத்துயிர் அளிக்க முயன்ற கதரைத் தீர்த்துக் கட்டுவதில் முனைந்திருக்கிறார்கள்! - அதற்காகவே பாவத்தை மறைக்கும் சின்னமாக, பதவிப் பெருமையையும் படாடோபத்தை யும் எடுத்துக்காட்டும் அடையாளமாக அதைப் பரப்பி வருகிறார் கள்! அப்படிப் பட்டவர்களுக்குக் கைத்தறியைக் கவனிக்க நேரம் எங்கே இருக்கிறது? நேரம் இருந்தாலும் மனம் எங்கே இருக்கிறது? மனம் இருந்தாலும் 'மன்னுயிரெல்லாம் தன்னுயிர்' என்று மானங் காக்கும் பண்புதான் எங்கே இருக்கிறது? அழியும் தொழிலுக்கு ஆக்கத்தா அத்தொழிலை நம்பி அழிந் தோர்க்கு ஊக்கந்தர உருப்படியான வேலைகள் இதுவரை ஒன் துமே நடைபெறவில்லை. இந்த நிலையில் தீபாவளி கொண்டாடப்