பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

யாருக்குப் பிரதிநிதி?

"அம்மா!"

"யார், அது?”

"ஐயா இருக்கிறாரா, அம்மா?” "ஒண்னுமில்லை, அம்மா அவரைக் கொஞ்சம் பார்க்கணும்.”

"ரொம்பப் பார்க்க வேண்டியதில்லையோ! ஒண்ணுமில்லாததற்கு அவரைப் பார்ப்பானேன்?”

"இல்லை அம்மா! வந்து....."

"என்னத்தை வந்து...... ? ஐயாவைப் பார்ப்பதற்கு வேளை நாழி ஒன்றுமே கிடையாதா? நினைத்த நேரத்திலெல்லாம் பார்க்க வந்துவிட வேண்டியது தானா? இந்தக் கொட்டும் மழையிலே எப்படித்தான் நீங்கள் வந்து இப்படிக் கழுத்தை அறுக்கிறீர்களோ தெரியவில்லையே?”

இந்தச்சமயத்தில் புதிதாகச் சிநேகமான ஒரு பெரிய மனிதருடன் சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருந்த ஐயா, "என்னடி அது? இப்படி உள்ளே வா" என்று தம்முடைய தர்மபத்தினியை அழைத்தார்.

"அது என்ன எழவோ இங்கே வந்து பாருங்கள் அசல் தரித்திரங்களா ஏழெட்டு வந்து நிற்கிறதுகள்!" என்று சொல்லிக் கொண்டே அம்மா உள்ளே சென்றாள்.

இன்னொரு சமயம் வந்து தம்மைப் பார்க்கும்படி அந்தப் பெரிய மனிதரிடம் சொல்லிவிட்டு, ஐயா எழுந்து வெளியே வந்தார். அம்மா சொன்னபடி அங்கே ஏழெட்டு அசல் தரித்திரங்கள் தங்கள் தங்கள் மனைவி மக்களுடன் தலைவிரி கோலமாக வந்து நின்று கொண்டிருந்தன.

“என்னடா, இது? நீங்கள் யார்? என்ன சேதி" என்று வெளியே வந்த ஐயா அதிகாரத் தோரணையில் இரைந்து கேட்டார்.

"சாமி நாங்க செம்படவனுங்க சமுத்திரக் கரை யோரமா ஆளுக்கொரு குடிசை போட்டுக்கிட்டு எங்க தொழிலைச் செஞ்சிக்கிட்டு இருந்தோம். அந்தக் குடிசை இருக்கிறது சமுத்திரக் - -