பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

226

விந்தன் கதைகள்

சக்கிமுத்தும் நல்லமுத்தும் தேநீர் குடித்து முடிந்ததும், கள் குடித்தவர்கள் போல மீசையை ஒதுக்கி விட்டுக் கொண்டே தங்களுடைய குடிசைகளை நோக்கி விறைப்புடன் நடந்தனர். அந்தச் சமயத்தில் "மருக்கொழுந்து, மருக்கொழுந்து" என்னும் வையம் பெறும் வழங்கோசை எங்கிருந்தோ வந்து, அவர்களுடைய காதில் ‘கணீ'ரென்று விழுந்தது. அந்த ஓசையைத் தொடர்ந்து மருக்கொழுந்தின் வாசமும் வந்தது. அடுத்த விநாடி அவர்களுக்கு எதிரே மருக்கொழுந்து கூடைக்காரி ஒருத்தி ‘இட்டி அடி நோவ ஆனால் எடுத்த அடிகொப்பளிக்காமல் வட்டில் சுமந்து மருங்கசைய' வந்து கொண்டிருந்தாள். அவளை வழிமறித்து நிறுத்தி "என்ன புள்ளே இந்த மருக்கொழுந்து வாசம் உன் மேலே யிருந்து வீசுதா? இல்லே மருக்கொழுந்திலே யிருந்து வீசுதா?" என்று கேட்டான் இசக்கிமுத்து.

“எப்படி வேணுமினாலும் வச்சுக்கோ!" என்று இடையிலிருந்த கூடையை எடுத்து அவனுக்கு எதிரே நீட்டினாள் அவள்.

உடனே இசக்கிமுத்து அரையனாவுக்கு மருக்கொழுந்து வாங்கித் தன்னுடைய மடியில் வைத்துக் கொண்டு நல்லமுத்துவைப் பார்த்துக் கண் சிமிட்டினான்.

"என்ன அண்ணே, உனக்கும் சோக்குப் பிறந்துடிச்சுப் போல் இருக்குது!" என்றான் நல்லமுத்து.

"நல்லாயிருக்குது அண்ணே, நீ சொல்றது! நான் மட்டும் என்ன உனக்கு மனுசனாகத் தோணலையா?”

"என்னியிலேருந்து நீ மனுசனானே, கள்ளுக்கடையை எடுத்த நாளிலே யிருந்துதானே"

"நீ மட்டும் அதுக்கு முன்னாலேயே மனுசனா யிருந்தியா? போ அண்ணே, போ வெளியே சொன்னாவெக்கக் கேடு; அழுதாத்துக்கக் கேடு. நம்ம அழகை நாமே எடுத்துச் சொல்லிக்கனுமாக்கும்?”

"சரி அண்ணே, நானும் மருக்கொழுந்து வாங்கிக்கிறேன்; எனக்கும் சோக்குப் பிறக்கட்டும்!" என்று சொல்லிக் கொண்டே நல்லமுத்தும் அரையனாவுக்கு மருக்கொழுந்து வாங்கித்தன்மடியில் வைத்துக் கொண்டான்.

இருவரும் மேலே நடந்தனர். சிறிதுதுரம் சென்றதும் எங்கிருந்தோசாராய நெடி ‘குப்'பென்று வந்து அவர்களுடைய மூக்கைத் துளைத்தது. திடுக்கிட்டுத்