பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழப் பிறந்தவன்

", குழந்தே” என்று இரைந்தான் இருளப்பன்.

“என்னப்பா?" என்று கேட்டுக் கொண்டே வந்தாள் கேதாரி.

"ரொம்ப நாளா உன்னை ஒண்ணு கேக்கணும் கேக்கணும்னு எனக்கு எண்ணம்..."

"கேளேன்"

"உன்னைப் பத்தி ஊரிலே நாலு பேரு நாலு விதமாப் பேசிக்கிட்டு இருக்காங்களே அதெல்லாம் நெசந்தானா?”

“என்ன பேசிக்கிட்டு இருக்காங்க?”

"ஊரிலே இருக்கிற பயல்களை யெல்லாம் நீ பார்க்கிறயாம், பார்த்துச் சிரிக்கிற யாம், கூடிப் பேசறியாம் - இப்படியெல்லாம் பேசிக்கிட்டு இருக்காங்களேம்மா, இதெல்லாம் நெசமான்னு கேக்கறேன்?”

கேதாரி களுக்கென்று சிரித்தாள்.

"என்னாம்மா! நான் கேக்கறேன்? ஏன் சிரிக்கிறே? பொகையிலை பிரிச்சாப் போச்சு, பொம்பிளை சிரிச்சாப் போச்சுன்னு பெரியவங்க சொல்லுவாங்க. இப்படியெல்லாம் சிரிக்கக் கூடாது, அம்மா இதெல்லாம் நமக்கு அடுக்காது. காலம் இப்படியே போய்க்கிட்டு இருக்கும்னா நீ நினைக்கிறே9....உ.ம்...நமக்கும் நல்ல காலம் வரும். அப்போ நமக்கும் நாலு காசு கிடைக்கும். கடவுளும் கண்ணைத் திறந்து பாப்பாரு..."

"அப்படின்னா, இப்போ கடவுள் கண்ணை மூடிக்கிட்டு இருக்காரா, அப்பா?”

“ஐயோ! அப்படியெல்லாம் கடவுளைக் கேலி செய்யாதே, அம்மா கன்னத்திலே போட்டுக்கோ....கடவுள் கண் திறந்து பார்த்தா நமக்குக் கட்டாயம் நல்ல காலம் வரும். அப்போகண்ணுக்கழகாநான் ஒரு பையனைப் பார்த்து உனக்குக் கண்ணாலம் பண்ணி வைக்கிறேன்..."

"அந்தப் பையனை நான் பார்க்க வேண்டாமா, அப்பா? அவன் என் கண்ணுக்கு அழகாயிருக்க வேண்டாமா, அப்பா?”

"ஐயோ! உன்னை யாரு பார்க்கவேணாம்னு சொன்னா? நல்லாப் பாரு! பார்த்து உன் மனசுக்குப் பிடிச்சா நீ அவனைக் கண்ணாலம்