பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மனித யந்திரம்

69

‘ஸலுலாய்ட்’ பொம்மை மூன்று சக்கரசைக்கிள்முதலியவை வாங்கித் தராவிட்டாலும் மரப்பாச்சி, ஓலைக் கிலுகிலுப்பையாவது வாங்கித் தரவேண்டும். வீடு தேடி வரும் விருந்தாளிகளை மனங்கோணாமல் உபசரிக்க வேண்டும். பந்து மித்திரர்கள் அவ்வப்போது நடத்தும் கல்யாணம், கர்ண வேதனம், சீமந்தம் முதலிய விசேஷங்களில், மூக்கால் அழுது கொண்டாவது அவன் சன்மானம் செய்ய வேண்டும் - அப்பப்பா! இத்தனை கஷ்டங்களுக்கு ஓர் ஏழைத் தொழிலாளி ஈடு கொடுப்பது எப்படி? இந்தக் கஷ்டங்களையெல்லாம் அளவுகோலாக வைத்துக் கொண்டா முதலாளிகள் அவனுக்குச் சம்பளம் கொடுக்கிறார்கள்?

இந்த லட்சணத்தில் அப்பாஇரண்டு மாதகாலம் ஆஸ்பத்திரியில் இருந்தால் பெண் ஏன் பிச்சை எடுக்க வரமாட்டாள்?

***

ப்படியெல்லாம் எண்ணிக் கொண்டே சென்ற நான், சிறிது நேரத்திற்கெல்லாம் சிறுமியின் வீட்டை அடைந்தேன். அவளுடைய அம்மா என்னைக் கண்டதும் “வாங்க, அண்ணா மன்னி செளக்கியமா?” என்று கேட்டபடி என்னை வரவேற்றாள்.

“செளக்கியந்தான்!” என்று சொல்லிவிட்டு “கஸ்தூரியின் கதி ஏன் இப்படியாச்சு?” என்று நான் அவளை விசாரித்தேன்.

“கால வித்தியாசம், அண்ணா! அவர் சம்பாதிக்கும் போதே கையில் ஒரு காலணா மிச்சமிருக்காது. இப்பொழுது கேட்க வேண்டுமா? அவர் பாயும் படுக்கையுமாகி விட்டார். வேறு வழியில்லாமல் நான் இரண்டு பெரிய மனிதர்கள் வீடுகளில் வேலை செய்து வருகிறேன். நான் வேண்டாமென்றாலும் சொன்னாலும் கேட்காமல் கஸ்தூரியும் என்னுடைய கஷ்டத்தில் பங்கெடுத்துக் கொள்கிறாள். இதுதான் அவளுடைய கதி!”

“ஏன், இந்தச் சங்கடமான சமயத்தில் முதலாளி உபகாரச் சம்பளம் ஒன்றும் கொடுத்து உதவி செய்யவில்லையா?”

“ஐயா! உபகாரச் சம்பளம் கொடுக்காமலிருப்பதோடு நின்றால் போதுமே! அவருக்காக வேலை காத்திருக்காது என்று வேறே சொல்லுகிறார்களாமே!” என்றாள் அவள்,

இதைக் கேட்டதும் என் சிந்தனை சுழன்றது - என்ன அநியாயம்! கேவலம் ஒரு மெஷின் வேலை செய்வதற்கு லாயக்கில்லாமற் போனால் அதைப் பழுது பார்க்க ரூபாய் ஆயிரம் வேண்டுமானாலும்