பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தங்கமே தங்கம்

85

“நீ அழணும். அப்போது உன் அழகைப் பார்க்கணும்னு தானே அந்தப் பாட்டைப் பாடறேன்!” என்பான் நந்தபாலன்.

தங்கம் ‘களுக்’கென்று சிரித்துவிடுவாள்.

“பார்த்தாயா தங்கம், என்னை ஏமாத்திப்பிட்டயே” என்பான் நந்தபாலன்.

திடுக்கிட்டுவிடுவாள் தங்கம். “நான் என்ன ஏமாற்றி விட்டேன்?” என்று அவளுக்கு ஒன்றும் புரியாது. முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு “நான் உன்னை என்னா ஏமாத்திப்பிட்டேன்? சொன்னத்தான் ஆச்சு” என்று ஊஞ்சலை விட்டு கீழே குதித்துவிடுவாள்.

நந்தபாலன் சிரித்துக்கொண்டே “அது தான் அழாம ஏமாத்திப்பிட்டியே” என்று அவள் கன்னத்தை லேசாகத் தட்டப் போவான். தங்கம் அதற்கு இடங்கொடாமல் அவனைப் பாடாய்ப் படுத்தி மனம் களிப்பாள்!

அந்தி வேளை வந்ததும் அவர்கள் அங்கங்கே மேய்ந்து கொண்டிருக்கும் ஆடு மாடுகளை ஒன்று சேர்த்து ஓட்டிக் கொண்டு வருவதற்காக மலைப்புறத்திற்குச் செல்வார்கள். அப்பொழுதும் தங்கம் ஒரு குன்றிலிருந்து இன்னொரு குன்றுக்குச் செல்லும்போதும் குன்றைவிட்டுக் கீழே குதிக்கும் போதும் அநாயாசமாகத் தாவுவாள். நந்தபாலனுக்குச் சில இடங்களில் பிரமிப்புத் தட்டிவிடும். அவன் அவளைப் பின்பற்ற முடியாமல் விழிப்பான்; அம்மாதிரி சமயங்களில் தங்கம் அவனுக்குக் கைகொடுத்து உதவும் போது அவனைச் சிரிப்பாய்ச் சிரிக்க வைத்துவிடுவாள். நந்தபாலன் அவளுக்குச் சளைக்காமல் “தங்கம்! நான் என்னாத்துக்கு அந்தக் குன்றிலிருந்து குதிக்க அப்படி முழிச்சேன், தெரியுமா? எல்லாம் உன் கையைப் பிடிக்கனுமேங்கிற ஆசையாலேதான்” என்று சொல்லிச் சமாளித்துக் கொள்ளப் பார்ப்பான்.

* * *

டைசியில் நந்தபாலனுடைய ஆசையில் ஒரு நாள் மண்ணைப் போட்டு விட்டான் கோவிந்தக் கோனான். அதற்கேற்றாற்போல் அன்று ஓர் ஆட்டுக்குட்டி ஒநாய்க்கு இரையாகிவிட்டது. அதைப்பற்றி அவன் நந்தபாலனைத் திட்டிக் கொண்டிருக்கும்போது அங்கே வந்த எதிர் வீட்டுக் கோபாலக் கோனான், “அவன் அங்கே மாட்டையா மேய்க்கிறான்? உன் மகளையல்லவா மேய்ச்சுக்கிட்டு இருக்கிறான்”