பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

358

விந்தன் கதைகள்

வந்திருக்கிறீர்? நீர் உம்ம வீட்டு வேலையைச் செய்தால், நான் எங்க வீட்டுக் காசை கொடுக்கப் போகிறேன்; இவ்வளவுதானே விஷயம்?" என்று கருப்பையா அவன் கொஞ்சமும் எதிர்பாராதவிதமாக ஒரு வெத்து வெடியைத்துக்கி எறிந்து அவனைத் திணற அடித்தார்.

கோபாலசாமி அசந்து போனான்.

கறார் கருப்பையா வெற்றியுடன் பின்வாங்கி வீட்டுக்குள் வந்தார். குமாஸ்தா என்றால் முதலாளியிடம் அடக்க ஒடுக்கமாக நடந்துகொள்ளவேண்டியதுதான்; அதற்குப் பார்த்தால் நாம் இல்லாத வேளையில் அந்தச் சர்க்கார் ஆட்கள் வந்தால் இவன் கொஞ்சம் நிற்க வேண்டாமோ?"என்று தமக்குள் சொல்லிக்கொண்டே பீரோவைத் திறந்தார். சாவிக் கொத்தையும் ஒரு நூறு ரூபாய் பணத்தையும் எடுத்துக் கொண்டு வெளியே வந்தார்.

"இந்தாரும் சாவி, இதோ நூறு ரூபாய் பணம்......." என்று ஆரம்பித்தார் கருப்பையா.

அசட்டுக் கோபாலசாமி குறுக்கிட்டு பணம் என்னத்துக்கு சார்?" என்று அசடு வழியக் கேட்டான்.

"நாசமாப் போச்சு! நாலு நாட்களாக அந்தச் சத்திய கீர்த்தி 'சாமிக்கண்ணு' உமக்கு என்னதான் சொல்லிக் கொடுத்தான்?" என்று எரிந்து விழுந்தார் கருப்பையா.

கறார்கருப்பையாவின் அரிசிரேஷன்கடையில் குமாஸ்தாவாக இருந்தவன் சாமிக்கண்ணு. ஆரம்பத்தில் அவன் வெறும் சாமிக்கண்ணாகத்தான் அவருடைய கடைக்கு வேலை பார்க்க வந்தான். வேலையிலிருந்து விலகும் போது 'சத்திய கீர்த்தி' என்னும் பட்டத்தோடு விலகினான். அந்தப் பட்டத்தை அவனுக்கு மனமுவந்து அளித்தவர் கறார் கருப்பையாதான்.

காரணம், 'புத்தக ஞானத்தைக் கொண்டு 'சத்திய கீர்த்தியாக வாழ விரும்பியவன் சாமிக்கண்ணு. 'அனுபவ ஞானம்' அதற்கு நேர் விரோதமாக யிருந்ததைக் கண்டதும் அவனுடைய மூளை குழம்பிற்று. அந்த மட்டும் தனக்குப் பைத்தியம் பிடிப்பதற்குள் அவன் ஒருவாறு சமாளித்துக் கொண்டு விட்டான். அதற்குத் துணையாயிருந்தது அவனுடைய பசி;பசியென்றால் பெண்ணைப் பற்றிய பசி அல்ல; சோற்றைப் பற்றிய பசி!

இந்தப் பசியின்காரணமாக அவன்கருப்பையாவின்காரியங்கள் தனக்குப்பிடித்தாலும் சரி, பிடிக்காவிட்டாலும் சரி-அவருடன் ஓரளவு