பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



மிஸ் நளாயினி-1950

367

எப்போது பார்த்தாலும் அந்தப் பெண்ணுக்கு உன் மேலேயே கண்! இப்படித்தான் தினசரி ஏதாவது ஒரு ஜோலி வைத்துக்கொண்டு, அவள் நீ இருக்கிற சமயமாகப் பார்த்துவிட்டு, இங்கே அடிக்கடி வந்து விட்டுப் போகிறாள்!"

"இருக்காது, அப்பா!"

"இல்லை ராஜா என்னுடைய கல்யாணத்திற்கு முன் உன்னுடை அம்மா கூட....."

இந்த சமயத்தில் அதுவரை அங்கே உட்கார்ந்திருந்த அவருடைய சம்சாரம், "ஆமாம், போங்கள்" என்று சொல்லிக்கொண்டே 'வாக்-அவுட்' செய்து விட்டாள். அவரும் அதற்கு மேல் தம்முடைய 'காதல் நாடகத்தைப் பற்றி விவரிக்காமல், 'இதெல்லாம் எதற்காக சொல்கிறேன் தெரியுமா? நான் கண்ணை மூடுவதற்குள் உனக்கு எப்படியாவது கல்யாணத்தைப் பண்ணிப் பார்த்துவிட வேண்டுமென்ற ஒரே ஆசையினால்தான்! நீயோ 'காதல் கல்யாணந்தான் பண்ணிக்கொள்வேன் என்று ஒரே பிடிவாதமாயிருக்கிறாய். 'அப்படித்தான் செய்வோமே!' என்று 'யாரையாவது காதலிக்கிறாயா?" என்றால், 'இல்லை' என்கிறாய். இப்படியேயிருந்தால் என்னுடைய ஆசை எப்போது நிறைவேறுவது, ராஜா!"

"அப்பா, நீங்கள் இப்படியெல்லாம் சொன்னால் கடைசியில் எனக்குப் பைத்தியந்தான் பிடித்துவிடும். நாலு நாவல்களைப் படித்துவிட்டு, நின்றால் காதல், நினைத்தால் காதல், கண்டால் காதல், காணாவிட்டால் காதல் என்று பிதற்றுபவன் நானல்ல. நான் சொல்லும் காதலுக்கும், நீங்கள் சொல்லும் காதலுக்கும் ரொம்ப ரொம்பதுரம். என் காதலி....."

"சொல்லு ராஜா, ஏன் வெட்கம்? நானேதான் வெட்கத்தைவிட்டு உன்னிடம் பேசத் தகாததையெல்லாம் பேசிக் கொண்டிருக் கிறேனே!"

“என் காதலி, தாசி வீட்டுக்குப் போக ஆசைகொண்ட நாயகனை தலைமேல் சுமந்து சென்ற நளாயினியைப் போன்றவளாயிருக்க வேண்டும்."

"அடேயப்பா அதெல்லாம் இந்தக் காலத்தில் நடக்குமா ராஜா? எவளிடமாவது இப்போது அப்படிச் சொன்னால்கூட அவள் சிரிப்பாளே!-'சரி!அப்படிப்பட்ட ஆசை உங்களுக்கு வந்தால் அதை நான் நிறைவேற்றி வைக்கிறேன்; அதே மாதிரி ஆசை எனக்கு வந்தால்