பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

99

"மனிதன் உயிரோடிருக்கும் போது குற்ற முள்ளவனாயிருக்கிறான்; குற்றமற்றவனாயிருந்தாலும் மற்றவர்களால் குற்றமுள்ளவனாகக் கருதப்படுகிறான். இதற்குக் கலைஞனும் விதிவிலக்கல்ல!"

"இறந்த பிறகு.?” "மனிதனும் சரி, கலைஞனும் சரி - குற்றமற்றவர் களாகிறார்கள் - மரணம், அவர்களுடைய குற்றங்களை ஜீரணித்துக்கொண்டு விடுகிறது!"

"அப்படியானால் இறந்த பிறகுதான் நீ அவர்களை நாடுவாயோ?”

"ஆமாம்."

"இந்த அக்கிரமத்தைத்தான் அவர்கள் வெறுக் கிறார்கள்!"

"இதில் என்ன அக்கிரமம் இருக்கிறது?"

"செத்த பிறகு நீ கலைஞர்களை நாடும் அக்கிரமந் தான்; அதனால் அவர்களுக்கு என்ன பயன்?"

"இல்லாமல் என்ன? - என்னுடைய அருளைப் பெறாத கலைஞர்கள் மரணத்துக்குப் பின் மண்ணோடு மண்ணாக மறைகிறார்கள்: பெற்றவர்களோ அமரர் களாகி மனித உள்ளத்தில் என்றும் நீங்காத இடத்தைப் பெறுகிறார்கள்."

"அந்த இடத்தை அவர்கள் ஜீவிய வந்தர்களா யிருக்கும் போதே பெற்றால் என்ன?”

"அதனால் அவர்களுக்கு நன்மை இருக்காது!"

"நன்மையில்லாவிட்டாலும் தீமையொன்றும் இருக்காதே?”