பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27

வாசற்கால் "டங்கென்று மோதிற்று; தலை "விண், விண்" என்று வலித்தது.

"ச்சூச்சூ!" என்றது வாய்; கண்கள் கண்ணிர் சிந்தின. வாய் சிரித்தது; "ஏன் சிரிக்கிறாய்?" என்று கண்கள் கேட்டன.

"ஒன்றுமில்லை; உங்களுடைய அசட்டுத்தனத்தை எண்ணித்தான் சிரிக்கிறேன்!” என்றது வாய்.

மண்ணை வாரி விட்டது காற்று, கண்கள் அருவிச் சிவந்து கண்ணிர் வடித்தன.

"அசட்டுப் பயல்களா மற்றவர்கள் துன்பத்துக் குள்ளானபோது நீங்கள் கண்ணிர் விட்டு அழுதீர்களே, இப்பொழுது யாராவது உங்களுக்காக அழுகிறார்களா?” என்று கேட்டது வாய்.

இப்போது கண்கள் சிரித்துக்கொண்டே கூறின:

"அதை எதிர்பார்த்தால் இந்த உலகத்தில் இன்பம் என்று ஒன்று இருக்கவே இருக்காது அப்பனே, இருக்கவே இருக்காது!"

號。芬 鬍

12. மனிதர்கள், ஜாக்கிரதை!

"அம்மா! ஒரு கவளம் அன்னம் இருந்தால் கொடுங்கள், அம்மா!"

"ஐயா ஒரு கவளம் அன்னம் இருந்தால் கொடுக்கச் சொல்லுங்கள், ஐயா!"

கேட்டுக்கு வெளியே நின்று, மாறி மாறிக் குரல் கொடுத்துப் பார்த்தான் அந்தப் பிச்சைக்காரன். "உண்டு"