பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

61


"ஐயோ, எனக்கு நீந்தத் தெரியாதே' என்றான் கொடாக்கண்டன்.

"அப்படியானால் நீந்தத் தெரிந்துகொள்ள வேண்டி யதன் அவசியத்தை நீ உணர வேண்டாமா? அதற்கு என்னாலான உதவியை இதோ செய்கிறேன்!” என்று சொல்லிவிட்டு, விடாக்கண்டன் அவனைத் திரும்பிக் கூடப் பார்க்காமல் நடையைக் கட்டினான்.

荔,荔,荔

47. இனப்பற்று

பொழுது விடியப்போகும் சமயம், முன் இரவில் தங்களுக்காக இரை தேடச் சென்ற தாய்புலியை எதிர் பார்த்து இரு குட்டிப் புலிகள் காத்திருந்தன. முன் கால்கள் இரண்டையும் நீட்டிச் சோம்பல் முறித்துக் கொண்டே, "இவ்வளவு நேரமாகியும் அம்மாவைக் காணோமே?" என்றது ஒரு புலிக்குட்டி.

"இன்னும் ஒன்றும் கிடைக்கவில்லையோ, என்னமோ?" என்றது இன்னொரு புலிக்குட்டி, நாக்கைச் சப்பு கொட்டிக்கொண்டே.

"எனக்குப் பசி காதை அடைக்கிறது........"

“எனக்கும்தான் பசி வயிற்றைக் கிள்ளுகிறது!"

“எதற்கும் நாம் கொஞ்சதூரம் சென்று அம்மாவைத் தேடிப் பார்ப்போமா?"

"வேண்டாம், வேண்டாம். 'நான் வரும் வரை நீங்கள் குகையை விட்டு வெளியே வரக்கூடாது" என்று அம்மா சொல்லிவிட்டுப் போயிருக்கிறாள்!"