பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

75


சந்தேகம், சுவாமி” என்று சொல்லிவிட்டு, நாராயணமூர்த்தியின் கமலவதனத்தைக் கண்கொட்டாமல் கவனித்தார் நாரதர்.


தமக்கு அருகிலிருந்த லட்சுமி தேவியை ஒருமுறை கடைக் கண்ணால் நோக்கிப் புன்னகை பூத்துவிட்டு நாராயணமூர்த்தி சொன்னார்:


“நாரத முனிவரே! பூலோக வாசிகளைப் போலவே நீரும் இப்படி அஞ்ஞானியாயிருப்பீர் என்று நான் நினைக்கவே இல்லை. இதில் என்ன சந்தேகம் உமக்கு?எவன் ஒருவன் இயற்கையின் உற்பாதங்களுக்கு அடிக்கடி ஆளாகும் ஏழைகளின் குடிசைகளை அகற்றிவிட்டு, அவற்றுக்குப் பதிலாக அவர்களுக்கு ஏற்றமிகு மாளிகைகளைக் கட்டித் தருகிறானோ, அவன் பூதவுடலை நீத்ததும் என்னை வந்து அடைந்துவிடுகிறான்; என்னுள் ஐக்கியமாகியும் விடுகிறான். எல்லாம் வல்ல எனக்காகக் கோயில் கட்டுபவன் என்னை வந்து ஒருநாளும் அடைவதில்லை; என்னுள் ஐக்கியமாவதும் இல்லை. இதனால் ஏழைகளின் கண்ணீரைத் துடைத்து அவர்களைச் சிரிக்க வைப்பவனின் பெயர் மண்ணுலகில் மறைகிறது; விண்ணுலகில் நிலைக்கிறது. எனக்குக் கோயில் கட்டித் தருபவனின் பெயரோ மண்ணுலகில் நிலைக்கிறது; விண்ணுலகில் மறைகிறது - இதுதான் உண்மை’’ என்றார் நாராயணன். “இப்பொழுதாவது உங்கள் சந்தேகம் தீர்ந்ததா?”


"தீர்ந்தது சுவாமி" என்றார் நாரதர்.