பக்கம்:வியாச விளக்கம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இசைவு - Concord. எழுவாயும் பயனிலையும், அல்லது முற்பெயரும் (Antecedent) சுட்டுப் பெயரும், அல்லது முற்பெயரும் தற்சுட்டுப்பெய ரும் (Reflexive Pronoun), அல்லது இயற்பெயரும் சிறப்புப் பெயரும் திணைபால் எண் இடங்களில் ஒத்திருக்கவேண்டும். உ-ம், இராமன் வந்தான் சீதை வந்தான் எழுவாயும் இராமர் வந்தார் (உயர்வுப்பன்மை ) பயனிலையும், மக்கள் வந்தார்கள் மகன் - அவன் - தன் முற்பெயரும் சுட்டுப் ஒருவர் - அவர்-தம் பெயரும் தற்சுட்டுப் மக்கள் - அவர்கள் - தங்கள் பெயரும். ஆசிரியன், பாரத்துவாசி, நச்சினார்க்கினியன் - சிறப்புப் பெயரும் இயற்பெயரும். உயர்திணையில், ஆண்பால் பெண்பால் என்னும் இருபாற்பெயரும் உயர்வுப்பன்மை விகுதியேற்கும். உ-ம். அரசர் வந்தார், அரசியார் வந்தார். ஆர்விகுதி பெரும்பாலும் உயர்வுப் பன்மையாக ஒருமைக்கு வழங்கி வருதலின், அத பன்மை குறிக்கத்தவறும் போது விகுதிமேல் மேல் விகுதி வேண்டப்படும். உ-ம், சபையார் வந்தார்கள். அன்சாரியைபெற்ற அர்விகுதியாயின் விகுதிமேல் விகுதிவேண் டியதின்ற. உ-ம். சபையார் வந்தனர். கடவுளை ஆண்பாலிலும் உயர்வுப் பன்மையிலும் ஒன்றன்பாலிலும் கூறலாம். உ-ம். கடவுள் இருக்கிறான், இருக்கிறார், இருக்கிறது. குழந்தை என்னும் பெயரை ஆண்பால், பெண்பால், ஒன்றன் பால் என்னும் மூன்று பாலிற் கூறலாம். உ.ம். குழந்தை வருகிறான் (ஆண்), வருகிறான் (பெண்), வருகிறது. (இருபாற்பொது) மாவு, சேய், குழவி, பிள்ளை என்ற பிற இளமைப் பெயர்களும் இங்கனமே. ஆன் என்னும் பெயர் ஒருமையில் பாலறியப்படாவிடத்து ஒன்றன் பால் வினை கொண்டும், பாலறியப்பட்ட விடத்து ஆண்பால் அல்லது