பக்கம்:வியாச விளக்கம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

52 யார் என்னும் வினாப்பெயர் உயர் நிணை முப்பாற்கும் பொது. உ-ம். அவன், அவள், அவர்- யார் ? என் (எவன்) அல்லது என்னை என்னும் வினாச்சொல் அஃறிணை விருபாற்கும் பொது. உ-ம், அது, அலை - என் (எவன்)? என்னை ? - என் என்பது ஒருமையில் என்னது என்றும், பன்மையில் என்ன அல்லது என்னலை என்றும் இருக்கும். என்ன என்பது ஒருமையில் வழக்குவது வழுவமைதி, குலப் பெயர்களைத் தனித்தனி கூறும்போது, ஆண்பால், பலர் பால், பால்பகா அஃறிணை என்ற மூன்று பாலிலும் கூறலாம். உ.ம். வேளாளன், வேளாளர், வேளாண், உயர் திணை எழுவாயும் அஃறிணை எழுவாயும் சேர்த்து, ஒரு முடிபு கொள்ளும் போது, உயர் நிணை வினை கொண்டு முடியும், உ-ம், இராமனும் காயும் வந்தார்கள். உயர் நிணை எழுவாய் இழிவு பற்றியதாயின், இருதிணை எழுவாய் களும் ஒரு முடிபு கொள்ளும்போது அஃறிணை வினை கொண்டு முடியும் உ-ம். பேதையும் சாயும் வந்தன. வெவ்வேறு சிறப்பு வினை கட்குரிய பல பொருள்களின் பெயர்கள், தனித்தனியாகவேனும் தொகுதியாகவேனும் கூறப்பட்டு ஒரு வினை கொண்டு முடியின், பொது வினைகொண்டு முடியும். உ-ம். பாலும் சோறும் பலகாரமும் தேனும் உண்டார்கள். கால்வகையுண்டியும் உண்டார்கள். பாலும் சோறும் தின்றார்கள் (அல்லது பருகினார்கள்) என்பது தவறு. ஒருவரைப் பல பெயர்களாற் சிறப்பித்துப் பெயர்தோறும் வினை கொடுப்பின், ஒரு வினை கொடுத்துக் கூறவேண்டும். உ-ம், ஐய! வருக, அண்ணால் ! வருக, அறிஞ! வருக. இங்கனமன்றி, ஐய! வருக, அண்னால் அமர்க என வேறுவினை கொடுப்பின் எழுவாய் வேறுபடல் காண்க. பல தொடர்கள் ஒரு வினைகொண்டு முடியின் தனித்தனி அம் முடியிற் கேற்றவாயிருத்தல் வேண்டும். உ-ம். ஏசு தாம் உலக முடிவில் இங்கு திரும்ப வருவதாகவும், தம்மை கம்பினாசெல்லாம் வீட்டைப் பெறுவாரென்றும் சொல்லிப் பாத்திற் செழுந்தருளினார்.