பக்கம்:வியாச விளக்கம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

V. வியாச வியல் - Essay-Writing. 1. கடிதமெழுதல் - Letter-Writing. கடிதப் பகுதிகள் :(1) இருக்கையும் தேதியும். இருக்கையும் தேதியும் சாதாரணக் சடிதத்தில் வலப்புற மேலும், விண்ணப்ப மனுக்களில் இடப்புற அடியிலும் குறிக்கப் படல் வேண்டும். (2) முகவுரை, விண்ணப்பத்திலும் மனுவிலும், தலைப்பில் இன்னாரிட மிருந்து இன்னாருக்கு என்று, முகவரி (address) யுடன் எழுது வது முகவுரையாகும். இது சாதாரணக் கடிதத்திற்கு வேண்டு வதன்று. (3) விளி - Address or Salutation. கடிதம் பெறுவாரைச் செய்தியறிவிக்கு முன் விளிப்பது விளியாகும். ஒருமை உயர்வுப்பன்மை பன்மை நண்ப , நண்ப ரீர், நண்பர்காள், ஐயரீர். ஐயன்மீர். அன்பு குறித்தற்கு அருமை, அன்பார்ந்த என்னும் அடைகளையும் வணக்கம் குறித்தற்குச் சனம், சனம் பொருந்திய என்னும் அடைகளை யும் விளிப் பெயர்க்கு முன் சேர்த்தல் வேண்டும். கனம் பொருத்திய ஐயா, என்று விளி முறையிலும், சனம் பொ ருத்திய யாவுக்கு எழுதவத என்ற முகவுரை முறையிலும், கடிதங்களை இரு வகைவாய்த் தொடங்கலாம். (4) செய்தி - Body of the Letter. அறிவிக்கப்படவேண்டிய செய்தி, அளவிற்கும் பொருளுக் குத் தக்கபடி, ஒரு பாகியாய் அல்லது பல பாகிகளாயிருக்க லாம்.