பக்கம்:வியாச விளக்கம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

73 (5) முடிப்பு - Subscription. செய்தியின் கீழ் வலப்புறத்தில், தங்களின் தாழ்மையுள்ள, தங்களின் வணக்கமுள்ள, தங்களின் கீழ்ப்படி தலுள்ள, தங்களின் உண்மையுள்ள, தங்களின் அன்பான என்னும் தொடர்களில் எற்றதொன்று எழுதப்படலாம். இனத்தார்க் கெழுதிய தாயின், எழுதுவார் தம் இனமுறையையும் குறிக்கலாம். கீழோர்க் கெழுதிய தாயின், வெறுமையாய் இங்கனம் என்று குறித்தால் போதும். (6) கையெழுத்து - Signature. முடிப்பின் கீழ்க் கையெழுத்திருத்தல் வேண்டும். (7) முகவரி அல்லது விலாசம் - Direction or Superscription. கடிதத்தின் மறுபுறத்திலாவது, கடிதக் கூட்டின் (cover) மேற்புறத்திலாவது, கடிதம் பெறுவாரின் முழு விலாசமும் எழு தப்படல் வேண்டும். கண்பர்க்கும் சமானர்க்கும், திரு (ஸ்ரீ), திருவானர் என்றும் பெரியோர்க்குத் திருமான் (ஸ்ரீமான்), மசா-ா -எ-ஸ்ரீ, சனர், மகாசனம், என்றும் அவரவர் நிலைக்கேற்ற அடை கொடுத்துப் பெயரெழுதல் வேண் இம், பெண்டிர்க்குத் திரு, திருமகள், திருமதி என்னும் அடை சளி லொன்று எழுதப்படலாம். இருபாலார்க்கும் உயர்வு கருதும் போது, பெயர்க்குப் பின் அவர் சன் என்று குறிப்பிடல் வேண்டும். முகவரி ஆங்கில முறையில் ஆட்பெயர், அலுவல், சதவெண், தெரு, தபால் நிலையம், தாலூசா, ஜில்லா, மாகாணம், தேசம் என்னும் முறையிலும், தமிழ் முறையில் இதன் தலைகீழாகவும் இருக்கலாம். இவற் முன் முன்னதே சிறப்புடைத்தாம். 2. வியாசம் - Essay. வியாச விதிகள் - Rules of Composition. மாணவர் வகுப்புவியாசம், தலைப்பில் பொருள் குறிக்கப் பெற்றும், இடப்பக்கம் வாந்தை (margin) யில் மேலே வியாச