இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
45
முன்னொரு காலத்தில் காட்டு ராஜாவான சிங்கம், தன் ராஜ்யத்தைச் சுற்றி வந்தது. அப்பொழுது ஒரு நீரோடையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. அந்த ஓடையைத் தாண்ட சிங்கம் விரும்பியது; ஆனால் ஒடை மிக அகலமாக இருந்தது. சிங்கத்திற்குக் கோபம் தாங்க முடியவில்லை. அது கர்ஜனை செய்தது, அதைக் கேட்டு கரடி,கழுதை,எருமை,நரி,முயல்,ஆடு,மான் முதலிய மிருகங்கள் எல்லாம் ஓடி வந்தன.'