பக்கம்:விலங்குக் கதைகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

53

மீனைப் பார்த்து, மீனே, எனக்கு உன் வாலைத் தாயேன். அழகுக்காகத் தானே வைத்திருக்கிறாய் என்றது ஈ.

"இல்லவே இல்லை. நான் பக்க வாட்டில் திரும்ப வேண்டும் என்றால் வாலின் உதவியால் தான் முடிகிறது. வால் எனக்கு மிகவும் தேவையான ஒன்று. உனக்கு கொடுக்க இயலாது" என்று பதிலளித்தது மீன்.

அடுத்து ஈ காட்டை நோக்கிப் பறந்தது, அங்கு ஒரு மரத்தில் உட்கார்ந்திருந்த மரங்கொத்திப் பறவயைப் பார்த்து, "உன்னுடைய வால் அழகுக்காகத் தானே இருக்கிறது. அதை எனக்கு கொடுக்க மாட்டாயா?" என்று கேட்டது.

"நீ என்ன சொல்கிறாய்? முட்டாள் தனமாக இருக்கிறதே. நான் மரத்தைக் கொத்துவதைப் பார்" என்று கூறி, மரங்கொத்தி தன்னுடைய வாலை மரப் பட்டையின் மீது முட்டுக் கொடுத்தது. பிறகு தன் உடல் முழுவதையும் வளைத்து, கிளையின் மீது மிகப் பலமாகத் தனது