பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கைப் பந்தாட்டம் 1 41

இல்லையேல் அமைப்பு முறை, சரியாக வராது. கையில் பந்து தேக்கமுற்றது என்ற தவறு அடிக்கடி நேரிடும், வலைக்கு மறுபுறம் பந்து அடிக்கடி செல்வதற்கும், மறு குழுவில் உள்ள அடிப்பவருக்கு ஏற்ற முறையிலும் அமைந்து, அவர்களுக்கு வெற்றி எண்ணைப் பெற்றுத் தர உதவியும் செய்து விடும்.

இன்னும் வலேக்கு அப்பாலும், அடிப்பவருக்குப் பின்னலும், அமைப்பாளருக்குப் பின்னலும் பந்து சென்றால், அடிப்பவரால் சரியாக அடிக்க முடியாது. அதனல் வெல்லு வதற்குரிய வாய்ப்பை இழக்க நேரிடும். ஆகவே, இந்தத் திறனில் சிறந்தால்தான் ஆட்டத்தில் இன்னும்

செழுமையையடைய முடியும்.

அடித்தெறிதல் (Service)

ஆட்டத்தைத் தொடங்குவதற்காக, முதன் முதலில் ஒரு குழுவினரால், (ஒருவரால்) இன்னொரு குழுவிற்குப் பந்தை அடித்துப் போடப்படுகின்ற நிலைக்கே அடித்து எறிதல்’ என்று பெயர். கடைக் கோட்டிற்கு வெளியே, அங்கு 3 மீட்டருக்குள் அடித்தெறியும் எல்லையை (Serving area)விட்டு, வெளியே அப்பால் போகாமல் நின்று, வலையின் மீதோ அல்லது கம்பங்களின் மீதோ பந்து படாமல், எதிர்க் குழுவினரின் பகுதியில் உள்ளேயாவது, கோட்டிலாவது விழுகின்றவாறு போடப்படுவதே சரியான அடித்து எறிதல்’ <!,(3, .

கைப்பந்தாட்டம் தோன்றிய சில நாட்களில் அடித் தெறிதல்’ அவ்வளவு சிறப்பான இடத்தைப் பெருமலேயே இருந்து வந்தது.ஆட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்காகவே இந்தமுறை இருக்கிறது என்றே எல்லோரும் கருதி வந்தனர். அக்க நாளில் அடித்தெறியும் நிலையில் ஒரு சில விதிகள் பின்பற்றப்பட்டு வந்தன.