பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்

பின்னுமாக ஒருவர் மாற்றி ஒருவர் உதைக்க வேண்டிய சூழ்நிலை அமைகிறது.

வெறுங்காலால் மண்டை ஒட்டை உதைக்கும் பொழுது காலுக்கு உண்டாகும் வலியைத் தீர்க்க, கணுக்கால் வரை அணியும் ஒருவகை காலணியை அணிந்துகொள்ளுகின்றனர். செருப்பினுல் உதைப்பதால், எதிரியை இன்னும் ஏளனப் படுத்துகிருேம் என்ற எனணம் அவர்களுக்கு அப்படி ஒரு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.

ஆர்வமும் உற்சாகமும் அளவுக்கு மீறிப் பெருகவே, மக்கள் இதையே ஒருவகை சிறந்த ஆட்டம் என்றெண்ணி உதைத்து ஆடிக் களித்தனர்.

நாட்கள் கழிந்தன. மக்களின் இதயமெல்லாம் இனம் தெரியாத இன்பம். புதிய புதிய மண்டை ஒடுகள் தினந்தினம் மண்ணிலிருந்து தோண்டி எடுக்கப் பட்டன. காலணி உள்ளவர்களும் இல்லாதவர்களும் கூடிக்கூடி உதைத்துக் களிக்கின்ற நேரத்திலேதான், புதிய மாற்றம் ஒன்று நிகழ்ந்தது. இந் நிகழ்ச்சிதான் கால் பந்தாட்டம் தோன்றியதற்குக் காரணமாய் அமைந்தது என்பார்கள்.

வயதுவந்தோரைக் காட்டிலும் அதிக ஆர்வம் கொண்டு ஆடிய ஒரு சிறுவன், மண்டை ஒட்டிற்குப் பதிலாக காற்று அடித்த பசுத்தோல் பை (Inflated cow bladder) ஒன்றைக் கொண்டு வந்தான். அதை உதைப்பதற்கு எளிதாக இருந்ததாலும், பந்தாக விளங்கக் கூடிய மண்டை ஒடு கொஞ்சங் கொஞ்சமாக மறையலாயிற்று. ஆட்டத்தில் தோல்பையே இடம் பெற்றாலும், விளையாட்டில் தோல்பை டேனின் மண்டைஓடு என்றே உதைப்பவர்களால் நினைவில் கொள்ளப்பட்டது. இந்த ஆட்டத்தின் பெயரே ‘டேன் ucaisol golol. 2.693,356 (Kicking The Dane’s Head)

என்பதுதான்.