பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால் பந்தாட்டம் 15

‘டேன் நாட்டினன் ஒருவன் இங்கிலாந்தில் பிடிக்கப் பட்டுக் கொல்லப்பட்டதாகவும், அந்தத் தலை ஆத்திரத்தில் எத்தப்பட்டதாகவும், அந்த நிகழ்ச்சியே இம்மாதிரியான விளையாட்டாக மாறியது” என்றும்;

“கி. பி. 217- ஆம் ஆண்டு ரோமுக்கும் பிரிட்டனுக்கும் நடைபெற்ற போரில், ரோமானியர்களை விரட்டியடித்த விழாவை, பிரிட்டன் கோலாகலமாகக் கொண்டாடிய நிகழ்ச்சியே இதன் ஆரம்பம்’ என்றும் மாறுபட்ட கருத்துக்கள் பலவுண்டு.

என்றாலும், கால்பந்தாட்டத்தின் அடிப்படை, மண்டை ஒட்டை உதைத்ததிலிருந்துதான் வந்திருக்கிறது என்றே

கூறலாம். ஆக, இங்கிலாந்துதான் இந்த ஆட்டத்தின் தாயகமா! என்றால் அதையும் உறுதியாக சொல்வதற்கில்லை.

இருந்தாலும், இந்த ஆட்டம் இங்கிலாந்தில்தான்

வளர்ந்தது, செழுமை அடைந்தது என்பதற்கு நிறைய சான்றுகள் உள்ளன. முன்னே நாம் கண்ட நாடுகளில் வாழ்ந்த வரலாறு இருந்ததே தவிர, வளர்ந்த, பிறநத வரலாறு எதுவும் இல்லை. இங்கிலாந்தில் இரண்டும்

இருப்பதால் கால்பந்தாட்டத்தை, வளர்த்து, உலகில்