பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால் பந்தாட்டம் 21

கொண்டிருந்த ஆட்டக்காரர்கள், அதன் அடிப்படை நோக்கத்தை சரியாகப் புரிந்து கொள்ள முடியாத நிலையிலிருந்தார்கள்.

ஆடுகளத்தினுள் இலக்கு இல்லை. ஆடுகளத்தின் கடைக் கோடே இலக்காகப் பயன்பட்டது. பந்தைக் கால்களால் தான் உதைக்க வேண்டும் என்ற நிலையிலிருந்து, கையில் தூக்கிக் கொண்டு ஒடுதல், எறிதல் போன்ற முறை களும் பின்பற்றப் பட்டு வந்தன. ஆடும் நேரத்தில் நடுவர்’ (Umpire) இல்லாமலே, இரண்டு குழுத் தலைவர்களும்’ (Captains) தங்களுக்குள்ளே உணர்ந்து கொண்டு பூசலைச் சமாளித்து வந்தனர். இந்த நிலை சிறிது சிறிதாக மாறி, ‘கால் பந்து கால் பந்தாகவே இருக்க வேண்டுமென்று விதிகளமைத்து வழிகள் வகுக்கப் பட்டன.

1846ம் ஆண்டு கேம்பிரிட்ஜ் கலாசாலையால்(Cambridge University) கால் பந்தாட்டத்திற்கான விதி முறைகள் ஆக்கப்பட்டு. செப்பனிடப்பட்டன. இதன் வளர்ச்சி உண்மையிலே வியக்கத்தகுந்த முறையிலேதான் இருந்தது.

1904ம் ஆண்டு ஏழு அங்கத்தினர்களைக் கொண்டு ‘அகில உலகக் கால் பந்தாட்டக் கழகம் (International Foot ball Federation) தோன்றியது. இன்று நூற்றுக்கு மேற் பட்ட நாடுகளை (அங்கத்தினர்களைத்)தன்னகத்தே கொண்டு சீரிய முறையில் பணியாற்றி வருகின்றது. இன்று ஒலிம்பிக் போட்டி அளவிலே இருந்து வருவது ‘கழகக் கால்பந்தாட்ட LDIT@jub” (Association Foot ball).

கால் பந்தாட்டத்திலிருந்து பிரிந்த ஆட்டங்கள் பல நாடுகளில், பல பெயர்களில் விளையாடப்பட்டு வருகின்றன. i அயர்லாந்திலே கேலிக் கால் பந்து (Gaelic foot ball) ,

என்றும்; அமெரிக்காவிலே அமெரிக்கன் கல்லூரிக் ’ k

L (American College football) argryth; asyl maj