பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோ கோ ஆட்டம் 219

(with draw) எதிர்க் குழுவினருக்கு அந்த வாய்ப்பைக் கொடுத்து ஆடச் செய்யலாம். (Follow on)

அப்படி அந்தக் குழு ஒத்தி வைப்பைக் கேட்கும் பொழுது, அவர்கள் மீண்டும் ‘விரட்டுதற்குரிய வாய்ப்பை இனி வேண்டாம் என்று முடிவாகவே கூறி விடக் கூடாது. ஏனெனில் தற்பொழுது விரட்டும் எதிர்க் குழுவினர் இவர்களுக்கு மேல் அதிகமான வெற்றி எண்களை எடுத்து விட்டால், இவர்கள் மீண்டும் விட்டுக் கொடுத்த விரட்டும் வாய்ப்பைப் பெற முடியாது போய் விடும்,

ஆகவே, மீண்டும் விரட்டிப் பிடிக்கும் வாய்ப்பைத் தேவையென்று கூறிதான் ஒத்தி வைக்க வேண்டும். பிறகு சமயம் நேர்ந்தால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆட்ட நடுவில், மாற்றாட்டக்காரரை சேர்த்துக் கொள்ள அனுமதி இல்லை. ஏதாவது காயம் ஏற்பட்டு அந்த ஆட்டக்காரரால் இனி ஆட முடியாது என்ற நிலை வந்தால், நடுவரின் அனுமதியோடு ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள

) T LI) ,

இனி விரட்டுவோரும், ஒடுவோரும் எவ்வாறு ஆட்டத்தின் விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிய வேண்டியது அவசியம். அந்த முறைகளைக் காண்போம்.

விரட்டுவோர் கவனிக்க (Chaser).

ஆடுகளத்தின் நடுக்கோட்டின் இடையிடையே எட்டு சதுர வடிவக் கட்டங்கள் உண்டு. அதில் விரட்டும் குழுவைச் சேர்ந்த எட்டு ஆட்டக்காரர்களும் ஒவ்வொரு கட்டத்தில் ைெசமாறிப் பார்த்து உட்கார வேண்டும்.