பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்

போட்டியின் கால அளவு 4 பகுதியாக, ஒவ்வொரு பகுதியும் 12 நிமிடங்களாகப் பகுக்கப்பட்டிருந்தது.

கல்லூரி மாணவர்களின் போட்டி ஆட்டம் பகுதி 20 நிமிடமாக (இரண்டு) 2 பகுதிகள் கொண்டிருந்தது. இவர் களுக்கு இடைவேளை 15 நிமிடங்கள் இருந்தன. உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் ஆட்டம்-பகுதி 8 நிமிடமாக 4 பகுதிகள் கொண்டு ஆடினர். இன்றைய ஆட்ட நேரம் பகுதி 20 நிமிடமாக உள்ள இரண்டு பகுதிகள். இடைவேளை 10 நிமிடமாகும்.

ஆட்டத்தின் வெற்றி எண்’ (Point) முறையும் பல நிலைகளில் இருந்து வேறுபட்டு வந்திருக்கிறது. ஒரு முறை கூடைக்குள் (வளையத்திற்குள்) பந்தை எறிந்த குழுவினருக்கு 3 வெற்றி எண்கள் அல்லது 3 எண்ணிக்கைக் கிடைக்கும். தொடர்ந்தாற்போல் மூன்று முறை தவறு (foul) செய்த குழுவினருக்கு எதிராக, அடுத்தக் குழுவினருக்கு 1 வெற்றி எண் கிடைக்கும்,

தவறிழைத்தக் குழுவினருக்குத் தண் டனையாக எதிர்க் குழுவினருக்கு வளையத்திற்குள் பந்தை தனி எறி (Fres Throw) எறியும் வாய்ப்பு உண்டு. இவ்வாறு

தண்டனையாகக் கிடைக்கும் தனி எறி’யை எறிய, ஒவ்வொரு குழுவும் “தனி எறியில்’ வல்லுநராக

விளங்கும் ஒருவரைத் தனியாக வைத்திருந்தது. இந்த முறைப்படி, ஃபோர்தம் (Fordham) என்ற இடத்தில் நடந்த போட்டி ஒன்றில், வளையத்திற்குள் குறியாகவும் சிறப்பாகவும் பந்தை எறியக்கூடிய ஒருவர், 28 முறை கூடைக்குள் தனி எறி எறிந்து 28 வெற்றி எண்களைப் பெற்றிருக்கின்றார்.

இப்படி பின்பற்றப்பட்டு வந்தத் தனி ஆள் தனி எறி’

-

முறையும் மாறி, விதியும் வேறு வழியைக் கடைப்