பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்

நடுவரிடமிருந்து கிளம்பும். அதுதான் ஆட்டத்தின் ஆரம்ப நிலையாகும். ஆட்ட மணிப் பொறியும் ஒடத் தொடங்கும். இருவரும் பந்திற்காக உயரே தாவி, தங்களுடைய குழுவினர் கையில் பந்து கிடைக்குமாறு தட்டி விட முயற்சி செய்வார்கள். இதைத் தான் ‘பந்திற்குத் தாவுதல்’ என்பார்கள்.

இவ்வாறு பந்திற்காகத் தாவும் ஆட்டக் காரர்கள், இருவரில் ஒருவர் பந்தைத் தொடுவதற்குள், அந்த வட்டத்தை விட்டு வெளியே வரக் கூடாது. ஒரு முறை தட்டிய பின், இரண்டாவது முறையும் தொடர்ந்து தானே ஆடக் கூடாது. ஆனால், மற்றவர் அப்பந்தைத் தொட்டு ஆடினுல், அவர் தொடர்ந்து அதை ஆடலாம்.

ஆட்டம் துவங்கும் பொழுதும், இரண்டாவது பகுதியின் ஆட்டத் தொடக்கத்திலும், மிகை நேர ஆட்டத் துவக்கத்திலும், பிடி நிலைப் பந்து’ (Held ball) ஏற்படும் போதும், ஆட்ட நேரங்களில் சில சமயங்களிலும் ‘பந்திற்குத் தாவுதல் நடை பெறும்.

2. 1 8d Liib hl (Held Ball)

எதிரெதிர் குழுவைச் சேர்ந்த இருவர் பந்தின் மேல் ஒரு கையையோ அல்லது இரு கையையோ : கொண்டு பந்தை, இறுக்கிப் பிடித்துத் தங்களுக்குள் உரிமையாக்கிக் கொள்ள முனைந்து, அதனல் ஆட்டத்திற்குத் தாமதம் ஏற்பட்டு, யாராவது ஒருவர் வலிமையைப் பயன்படுத்தித் தான் பந்தை எடுக்க வேண்டும், ஆட்டத்தை அதன் பிறகே தொடங்கவேண்டும் என்ற நிலை ஏற்பட்ட நேரத்தைத் தான் ‘பிடிநிலைப் பந்து’ என்று கூறுகிருேம்.

இந்த நிலை ஏற்பட்ட பிறகு, நடுவர் குழலொலி மூலம் ஆட்டத்தை நிறுத்தி, பந்தை எடுத்து, மீண்டும் ஆட்டத்தை