பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடைப் பந்தாட்டம் 83

பெறுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் அந்த இரண்டு கால்களில் எந்தக் காலேயாவது (Leg) ஒன்றை நிலையானதாகவும், மற்றாென்றை நகரும் காலாகவும் வைத்துக் கொள்ளலாம். அது அவருடைய விருப்பத்தையும் அந்த நேரத்தையும் பொறுத்தது. இடதுகால் நிலையாக இருந்தால், வலது கால் நகரும்; வலது கால் நிலையாக இருந்தால் இடது கால் நகரும்.

o

பந்தைத் தாவி உயரத்திலே பிடிக்கும் பொழுது; ஆட்டக்காரரின் ஒரு கால் மேலேயும் (In the air) மறுகால் தரையிலும் இருக்கிறது எனக் கொள்வோம். பந்தைப் பிடிக்கும்போது ஒன்று (Count one) என எண்ணவும். மேலே இருந்த கால் தரையைத் தொடும் பொழுது இரண்டு (Count Two) என்று எண்ணவும். இப்பொழுது கடைசியாகத் தரையை மிதித்த கால் நிலையான காலாகவும் (Pivot foot), மறுகால் நகரும் காலாகவும் மாறும் என அறிக.

பந்தை உயரே தாவிப் பிடிக்கும் பொழுது ஆட்டக் காரர்களின் கால்களிரண்டும் மேலேயே (In the air) இருக்கிறது என்று கொள்வோம். பந்தைப் பிடித்துக் கொண்டு கீழேகுதிக்கும்பொழுது, இருகால்களும் சேர்ந்தாற்