பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்

GLIT@ 560sru LL LIT@ (Parallel with the first one), ஏதாவது ஒரு காலை நிலையானதாகவும், மறுகாலை நகரும் காலாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

எனவே, பந்தைப் பிடிக்கும்பொழுது, ஒருகால் மேலேயும் மறுகால் கீழேயும் இருந்து கடைசியாக எந்தக்கால் தரையில் படுகிறதோ அதுதான் நிலையான காலாகும். இரண்டு கால்களும் ஒரே நேரத்தில் சேர்ந்தாற்போல் தரையை மிதித்தால், எந்தக் காலையும் நிலையாக வைத்துக் கொள்ளலாம் என்பது அறிவதற்கு எளிதாகும்.

நிலையான காலேயே மாற்றி நகர்த்திவிட்டால் அதற்கு அசைவு (Moving) என்று பெயர். இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ள - பந்தைப் பிடிக்கும் ஆட்டக்காரர் ஒரு எண்ணிக்கையில் நின்றால் இரு கால்களில் ஏதாவது ஒன்று நிலையான கால். இரண்டு எண்ணிக்கையில் நின்றால் கடைசியாகத் தரையில் பட்ட காலே நிலையானது என்று

அறிக.

3. Shomj (Arm work)

கூடைப்பந்தாட்டத்தில் பந்துக்கும் கைகளுக்கும் அதிக உறவுண்டு. அதிக வேலையுண்டு. உயரமானவர்கள் ஆடுகின்ற ஆட்டம் (Tall men’s game) என்று இது கூறப்படுகிறது. இந்த ஆட்டத்தில் கைத்திறனே அதிகமாகப் பயன்படுகிறது.

பந்தைத் தட்டிக்கொண்டு ஒடுவதற்கும் பாய்ந்து பந்தைப் பிடிப்பதற்கும், தூரயிருந்து வளையத்திற்குள் சரியாக பந்தை வீசுவதற்கும், தன் குழுவினருக்கு பல இக்கட்டான சூழ்நிலைகளில் பந்தை வழங்குவதற்கும். (கைமாற்றி அனுப்பல் Passing என்ற பகுதியில் விரிவாக காண்க) கைதான் உதவுகிறது.